ஜோராக தயாரான கிளாம்பாக்கம்.. குவிக்கப்பட்ட ஸ்பெஷல் பேருந்துகள்.. இந்த வாரம் ரொம்ப முக்கியம்!
சென்னை: ரம்ஜான், வார விடுமுறை தினங்கள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று, நாளை மற்றும் வெள்ளிக்கிழமை 1,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து 1,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சென்னை டூ தென் மாவட்டங்கள், கோவை டூ தென் மாவட்டங்கள், மதுரை, திருச்சி டூ மற்ற வட மாவட்டங்கள், குமரி டூ வட மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

இது போக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
2024 பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .க.பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.
2024 -பாராளுமன்ற தேர்தல், எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி. இ.ஆ.ப., தலைமையில், இன்று (08/04/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை இணை ஆணையர். காவல்துறை உயர் அலுவலர்கள். அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
2024-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2.092 பேருந்துகளுடன். 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 20/04/2024 மற்றும் 21/04/2024 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பாராளுமன்ற - சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), - திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம்.
கிளாம்பாக்கம் திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர். எர்ணாகுளம், திண்டிவனம். விழுப்புரம். கள்ளக்குறிச்சி. திருக்கோவிலூர், விருத்தாச்சலம். அரியலூர், திட்டக்குடி. செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர். சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி. நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ): திண்டிவனம்,விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் (SETC உட்பட).
வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்: தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம். வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டாக்டர் பேருந்து நிலையம், கோயம்பேடு: கிழக்கு கடற்கரை சாலை வழியாக (SETC உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி. கடலூர் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம்,செய்யாறு. ஆற்காடு. ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி கிருஷ்ணகிரி. ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications