Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் கிளம்பிட்டீங்களா? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் விழுந்த 2 லட்டு.. தமிழக அரசு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார இறுதி துவங்கிவிட்ட நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்து 2 விதமான சர்ப்ரைஸ்கள் வெளியாகி உள்ளன.. என்ன அது?

தமிழக அரசு உத்தரவிட்டும்கூட, பெரும்பாலான ஆம்னி பஸ்கள், வழியிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டுவிடுகிறதாம். இதனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வராமல், ஸ்டிரைட்டாக ஜிஎஸ்டி சாலை வழியாகவே தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனவாம்.

Kilambakkam Bus Stand and What are the 2 surprises by Tamil Nadu Government about Kilambakkam Bus Terminus

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், ஆம்னி பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகளிடையே பெருத்த அதிர்ச்சியையும், அலைச்சலையும், அதிருப்தியையும் இது உண்டுபண்ணியதாக தெரிகிறது. அதனால்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து நிற்காத, ஆம்னி பஸ்கள் கடந்த வாரம் மடக்கப்பட்டன..

அபராதங்கள்: குறிப்பாக, செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கே.கே நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களும், கிளாம்பாக்கம் போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டனர்.

இரவு 10 மணி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிய 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை மடக்கி பிடித்து, தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், ஆம்னி பஸ்களின் பர்மிட்களும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த சிலநாட்களாகவே, எந்தவித தொந்தரவும் கிளாம்பாக்கத்திலிருந்து கிளம்பவில்லை.. பயணிகளும் சிரமமின்றி ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

2 சர்ப்ரைஸ்: இப்படிப்பட்ட சூழலில் வார இறுதி நாட்கள் வரப்போகின்றன.. வழக்கம்போல் பயணிகள் வெளியூர்களுக்கு பயணமாவார்கள். அந்தவகையில், திடீர் சர்ப்ரைஸ் 2 விதமான தமிழக அரசு தந்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வார இறுதியையொட்டி, பல்வேறு ஊா்களுக்கு 420 சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்க உள்ளது.

அந்தவகையில், மாா்ச் 1, 2 ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தாசலம், போளூா் ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடும் என்பதால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை 180 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை மேலும் 240 சிறப்புப் பேருந்துகளும் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு பஸ்கள்: எனவே, போக்குவரத்துக் கழக இணையதளம் மூலம் பதிவு செய்து சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது சென்னைவாசிகளுக்கு மிகுந்த பலனை தரும் என்றே நம்பப்படுகிறது.

அதேபோல, மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். கிளாம்பாக்கத்திற்கு செல்லும் பயணிகள், 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி பிற இடங்களுக்கு 4 மணி நேரத்திற்குள் பயணிக்கும் திட்டம் இதுவாகும்.

40 ரூபாய்: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லலாம்.

சிறப்பு: அதேபோல, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இந்த திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+