கிளாம்பாக்கத்துக்கே கிளம்பிப்போன தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.. சென்னை டூ வண்டலூரில் ஹேப்பியோ ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பேருந்து முனையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.. திறப்பு விழாவையொட்டிய, நேரடியான ஆய்வுகளும் அதிரடியாக ஆரம்பமாகிவிட்டன.

இதன்காரணமாக, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை சுற்றி உள்ள சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், சென்னைக்குள் வருவதனாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Kilambakkam Bus Stand and When does the Kilambakkam Bus Terminus Open

போக்குவரத்து நெரிசல்: இப்படியான இந்த நெரிசலை குறைப்பதற்காகவும், சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிமையாக பயணம் மேற்கொள்வதற்காகவும்தான், கிளாம்பாக்கத்தில் இந்த புதிய முனை கட்டப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கிளாம்பாக்கம் பஸ் முனையமானது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இணைக்கும் புதிய பஸ் நிலையமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன், சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ரெயில் இணைப்பை ஏற்படுத்த, அதிகரிக்க திட்டமிடப்பட்டும் வருகிறது.

அதேபோல, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரெயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக சிஎம்டிஏ மற்றும் ரெயில்வே அதிகாரிகளின் ஆலோசனைகள் தொடர்ந்து வருகின்றன.

செயல் திட்டம்: இந்நிலையில், கடந்த வாரம், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை பயன்படுத்துவதற்கான செயல் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது... அதாவது, இந்த பஸ் முனையத்தை திறக்கும்போது, எந்தெந்த வாயில்களை எந்தெந்த வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேருந்து நிலையத்தில் அடித்தள 'பார்க்கிங்' பகுதிக்கு செல்லும் தனியார் வாகனங்களுக்கு நுழைவு, வெளியேற தனி வாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, பிரதான கட்டடத்தின் முகப்பு பகுதியில் பயணிகளை இறக்கிவிடவும், மறுபடியும் ஏற்றி செல்லவும் வரும் தனியார் வாகனங்களுக்கு, தனி நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நடந்து செல்வோருக்கும், பைக்குகளில் தனி நுழைவாயில் ஒதுக்கப்படுகிறது.

நுழைவாயில்கள்: வெளியூர் பஸ்கள் உள்ளே வர, ஜிஎஸ்டி சாலையில் ஒரு நுழைவாயில் ஒதுக்கப்படும். இந்த பஸ்கள் வெளியேற, பின்புறத்தில் அயஞ்சேரியை ஒட்டிய நுழைவாயில் ஒதுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 'பார்சல்' சேவையை செயல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் அனுமதிக்கப்படும். இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரையே இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்றெல்லாம் அந்த பிளான் தயாராகி உள்ளது.

தலைமை செயலாளர்: இந்நிலையில், நேற்று முன்தினம், அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, பேருந்து நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தால், அதிக வெளிச்சம் தேவையாக இருப்பதால் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, இன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.. திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வரும்நிலையில் இந்த பேருந்து முனையத்தின் நிலைமை, சூழல் குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்..

திறப்பு விழா: 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்த நிலையில், மிச்சம் 1 சதவீதம் பணிகளே முடிக்கவேண்டியிருக்கிறதாம். அதனால்தான், திறப்பு விழா தொடர்பான ஆய்வுகளை இப்போதே துவங்கியுள்ளார் தலைமை செயலாளர். விரைவில் கிளாம்பாக்கம் பயணிகள் பயன்பாட்டுக்கு வருவதால் சென்னையே திக்குமுக்காடி போயுள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+