கிளாம்பாக்கத்தில் நுழைந்த "தலை".. ஆம்னி பஸ்ஸும் வரல.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் "வேட்டை".. சபாஷ்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் இன்னமும் அடங்கவில்லை.. மொத்தம் 11 ஆம்னிகள் சிக்கி உள்ளன.. என்ன காரணம்?
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்னி பஸ் ஓனர்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள்.. அந்த வழக்கில் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு பகுதிகளில் ஆம்னி பஸ்கள், பயணிகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது.

ஜிஎஸ்டி சாலை: ஆனால், இந்த பெரும்பாலான ஆம்னி பஸ்கள், வழியிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டுவிடுகிறதாம். இதனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வராமல், ஸ்டிரைட்டாக ஜிஎஸ்டி சாலை வழியாகவே தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனவாம்.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், ஆம்னி பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகளிடையே பெருத்த அதிர்ச்சியையும், அலைச்சலையும், அதிருப்தியையும் இது உண்டுபண்ணியதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் அரசு போக்குவரத்து துறை அதிரடி காட்டியது.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லாமல் செல்லும், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கையை எடுப்பதாக முடிவானது.
ஆம்னி பஸ்கள்: அதன்படி, 2 நாட்களுக்கு முன்பு, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து நிற்காத, ஆம்னி பஸ்கள் மடக்கப்பட்டன.. குறிப்பாக, செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கே.கே நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களும், கிளாம்பாக்கம் போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டனர்.
இரவு 10 மணி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாமல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிய 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கலக்கம்: அதுமட்டுமல்ல, ஒரே நாளில் மட்டும் மொத்தம் 11 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.. இந்த பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து ஆணையரகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், ஆம்னி பஸ்களின் பர்மிட்களும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, விசேஷ நாட்களின்போது, பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது..
தேவைப்பட்டால் அவர்களது லைசென்ஸையும் ரத்து செய்யும்படி தெரிவித்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் நுழையாத ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அநேகமாக வார இறுதி நாட்களில், ஆம்னிகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கும் என்கிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications