ஊருக்கு போறீங்களா? சீட்டெல்லாம் காலியாயிருக்கு.. வாக்களிக்க ஸ்பெஷல் பஸ் கிளாம்பாக்கத்தில் ரெடி.. செம
சென்னை: வருகிற 19-ம் தேதி மக்களவை தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே சொந்த ஊருக்கு பயணிக்க போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பும் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
முன்னாக, தேர்தலையொட்டி போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னையில் உயர் அதிகாரிகளுடன் , போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

பேருந்துகள் : அப்போது, வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 7 ஆயிரத்து 154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து இரண்டு நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் இருந்து 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
எம்பி தேர்தல்: "2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன
மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன.
சிறப்பு பஸ்கள்: இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications