கிளாம்பாக்கத்தில் மீண்டும் பரபரப்பு.. போதிய பேருந்துகள் இல்லை.. 2வது நாளாக போராடும் மக்கள்
சென்னை; கிளாம்பாக்கத்தில் பயணிகள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மீண்டும் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று புகார் அளித்துள்ளனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றும் 250க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்றும் அங்கே இதேபோல் பேருந்துகள் தாமதமாக வந்தது. இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. கடைசியில் மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை புகார் எழுந்ததை தொடர்ந்து போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இன்றும் அங்கே போராட்டம் நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்து நிலையம்; இதற்கு இடையே: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி சாலையில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டிடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான குடிமராமத்து பணி தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் டெர்மினஸை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக்கிற்கான பணி இறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஸ்கைவாக் கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக, தெற்கு ரயில்வேக்கு, 20 கோடி ரூபாயை, மாநில அரசு ஏற்கனவே மாற்றியது குறிப்பிடத்தக்கது.
பேருந்து நிலையம்; சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.
எங்கே செல்லும்?: பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.
எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்
ஈசிஆர் வழி தவிர மற்ற வழிகளில் சென்னைக்கு கீழே பேருந்துகள் எங்கே சென்றாலும் அந்த பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வழியாக மட்டுமே செல்லும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications