கிளாம்பாக்கத்தில் மகிழ்ச்சி.. நோ அலைச்சல்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பாருங்க.. தமிழக அரசு சூப்பர்
சென்னை: வார இறுதி விடுமுறை நாட்கள் துவங்கியிருக்கும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் பயணிகள் வெளியூர்களுக்கு பயணமாவார்கள். அந்தவகையில், சென்னையிலிருந்து வார வாரம் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.

கிளாம்பாக்கம்: ஆனால், சமீப நாட்களாகவே, கிளாம்பாக்கம் பேருந்து பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதிலிருந்தே, போதுமான போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் திணறிவிட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தையும் முன்னெடுத்த நிலையில், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நிலைமையை சரிசெய்தது.
அதற்கு பிறகு, கடந்த ஒரு மாத காலமாகவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் எந்த பிரச்சனைகளும் இல்லை.. பொதுமக்களும் எந்தவிதமான சிரமமின்றி வெளியூர் கிளம்பி சென்று வருகிறார்கள்.
அலைமோதும் கூட்டம்: அந்தவகையில், இன்றைய தினம் வார இறுதி விடுமுறை துவங்கியிருக்கின்றன.. ஆனால், இன்று மகா சிவராத்திரி தினம் என்பதாலும், நாளை, நாளை மறுநாளும் சனிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாளாகிறது.. எனவே, சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி என தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும் இந்த கூட்டம் இன்னும் அதிகமாகும் என்றே தெரிகிறது.. எனவே, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவே, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
430 பஸ்கள்: அந்தவகையில், நேற்றைய தினம், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களுக்கு 270 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.. இன்று வெள்ளிக்கிழமை, மொத்தம் 390 பஸ்களும், நாளை சனிக்கிழமை 430 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் மொத்தம் 70 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.. அதேபோல, கோவை , பெங்களூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்தும் 200 ஸ்பெஷல் பஸ்கள் சிறப்புஇயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் நிம்மதி: ஆக மொத்தம், 3 நாள் விடுமுறையொட்டி, மொத்தம் 1,300 பஸ்கள் இயக்கப்படுகின்றன.. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் முன்பதிவு இணையதளமான www.tnstc.in மற்றும் செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications