கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்.. இதை மட்டும் திமுக அரசு செய்துவிட்டால் ஓஹோ பாராட்டு மழைதான்!
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்களுக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வடசென்னை பகுதி மக்கள் மணலி டூ கோயம்பேடு; கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த துயரத்தைப் போக்குவதற்கு விரைவான தீர்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளுமா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
வடசென்னையில் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா பகுதி நோக்கி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை தாண்டி கிளாம்பாக்கத்துக்கு பொதுமக்கள் வந்து தென்மாவட்ட பேருந்துகளை தேடி கண்டுபிடித்து ஏறுகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு செல்லும் தங்களுக்கு மன உளைச்சல்தான் அதிகம் என குமுறுகின்றனர்.

எவ்வளவு உளைச்சல்: கிளாம்பாக்கம் சென்னை மாநகரில் இருந்து வெகுதொலைவில் செங்கல்பட்டுக்கு அருகே இருப்பது உண்மைதான். சரி கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டது. எண்ணூர், மணலி, திருவொற்றியூரில் பெருமளவு தென்மாவட்ட மக்கள் வசிக்கின்றனர். கிளாம்பாக்கத்தை எட்டிப் பிடிக்கவே 2,3 மணிநேரமாகிவிடுகிறது. இது பெரும் அயற்சியைத்தான் தருகிறது. இத்தகைய அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் எளிதான தீர்வு ஒன்றையும் பொதுமக்களே முன்வைக்கின்றனர்.
'கிளாம்பாக்கம்' பேருந்து நிலையம்.. பேசாம செங்கல்பட்டுக்கு கொண்டு போங்க..குமுறும் தென் மாவட்ட மக்கள்!
பேருந்து நிலையங்கள் ஒருங்கிணைப்பு: அதாவது மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்குமான பேருந்துகளை இயக்கலாம். மாதவரத்தில் இருந்து மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தினால் சென்னை மாநகருக்குள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த வெளிவட்ட சாலையில்தான் திருமழிசையும் இணைகிறது.
பொங்கல் பயணம்.. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.. இதை படிங்க
இப்படி சென்னையை சுற்றிய புறநகர் பேருந்து நிலையங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் போது மக்களின் அலைச்சலும் மன உளைச்சலும் இயல்பாகவே அகலும்; அரசுக்கும் நற்பெயரும் கிடைக்கும். இவ்வளவு செய்த தமிழ்நாடு அரசு செலவோடு செல்வாக சென்னை மாநகரை சுற்றிய அனைத்து புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்தும் ஆகக் குறைந்தபட்ச எண்ணிக்கையிலாவது அனைத்து மாவட்ட பேருந்துகளும் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரலாம். இதன் சாத்தியங்கள், சிக்கல்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்தும் முடிவெடுக்கலாம் என்பது பொதுமக்களின் கோரிகை. அரசு கவனத்தில் கொள்ளுமா?
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications