கிளாம்பாக்கம் போகிறவர்களுக்கு.. வந்த அசத்தலான குட்நியூஸ்.. இனி ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாம் மாறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதனால் இனி கிளாம்பாக்கம் செல்வது இன்னும் எளிமையாக்கப்படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது; இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசு முடித்து கொடுத்தவுடன் புதிய ரயில்நிலையம் கட்டும் பணிகள் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

kilaampakkam bus

ஆனால் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ரயில் நிலையம் தமிழ்நாடு அரசின் செலவில் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ. 100 கோடி ரூபாயில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி சாலையில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டிடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான குடிமராமத்து பணி தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், கிளாம்பாக்கம் டெர்மினஸை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக்கிற்கான பணி இறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஸ்கைவாக் கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக, தெற்கு ரயில்வேக்கு, 20 கோடி ரூபாயை, மாநில அரசு ஏற்கனவே மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் குழப்பம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

மூன்று நடைமேடைகளும் 300 மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும் என்பதால் கட்டப்படும் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் மட்டுமே நிற்க முடியும், அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் 380 மீட்டர் நீள நடைமேடை தேவைப்படுவதால் அங்கு நிற்க முடியாது.

இதனால் வெளிமாநில, வெளிமாவட்ட ரயில்கள் அங்கே நிற்காது. தாம்பரத்தில் இறங்கியே மாற வேண்டும். சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் ரயில் நிலையம் இந்த வருட இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு இடையில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் இடையிலான பறக்கும் நடை பாலமும் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது போக இங்கே விரைவில் மெட்ரோ சேவையை தொடங்கவும் டிபிஆர் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+