குட்நியூஸ் மக்களே! இன்று முதல் தமிழகத்துக்கு 1460 சிறப்பு பஸ்! கிளாம்பாக்கத்தில் விறுவிறு ரிசர்வேஷன்
சென்னை: சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றிலிருந்து சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
வழக்கமாக, பணிநிமித்தம், கல்வி, போன்ற பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் தங்களது நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

விடுமுறை: எனவே, இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். தற்போது வார விடுமுறை ஆரம்பமாகிவிட்டதாலும், சுபமுகூர்த்த நாட்களும் அடுத்தடுத்து வருவதாலும், பஸ்களில் அதிக நெரிசல் காணப்படும்.. எனவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு வாரமும் செய்து வருகிறது.
அந்த வகையில், இப்போதும் இந்த வார இறுதி நாட்களை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. மொத்தம் 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்: அதாவது இன்றும், நாளையும் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 1,130 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
முன்பதிவு: மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். வெளியூர்களுக்கு செல்ல இன்று 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications