கிளாம்பாக்கம் பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியது.. இனி நிம்மதியாக போகலாம்.. செம!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆரம்பத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் இருந்தன. தொடர்ந்து பயணிகள் கோரிக்கையை அடுத்து ஒன்றொன்றாக நிறைவேற்றப்பட்டது. தற்போது கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் நின்று செல்லும் வகையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு பணிகளை அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கடந்த 2023ஆம் ஆண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேட்டில் இருந்தே தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டு அங்கு வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டதால், முதலில் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல் என முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.
இதேபோன்று கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
நீண்ட நாட்கள் கோரிக்கை
இது தொடர்பாக பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் கட்டுமானப் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்து கடந்த 5ஆம் தேதி காவல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கிளாம்பாக்கம் காவல் நிலையம்
கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை ஆகியவற்றை உறுதி செய்யும் பொருட்டு, காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் G.O. (MS) No.170, Home (Police XIV) Department, dated 04.03.2024 ன்படி, சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய T-21 கிளாம்பாக்கம் காவல் நிலையம், பேருந்து முனையத்திற்குள் தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்ததாக
இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), கிளாம்பாக்கத்தில் ஒரு நிரந்தரக் காவல் நிலையக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இக்கட்டிடம் 05.08.2025 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. தற்போது, இந்த புதிய கட்டிடம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இதில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, குற்றப் பிரிவு மற்றும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய முக்கியப் பிரிவுகள் 17.09.2025 முதல் பயன்பாட்டிற்கு வந்து முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications