கிளாம்பாக்கத்தில் "மேலே" கவனிச்சீங்களா? முடிச்சூர் மண்ணிவாக்கத்தில் யார்னு பாருங்க? சூப்பர் மாற்றம்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு தொடர்பான பணிகள் வேகமெடுத்து வரும்நிலையில், அது தொடர்பான சில தகவல்களும் வெளியாகி உள்ளன.
கிளாம்பாக்கத்தில் பேருந்து இணைப்புகளை தவிர வேறு எதுவும் இல்லாததே பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணமாகிவிட்டது. அதனால்தான், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 20 கோடி ரூபாய் தெற்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டது.. தற்போது அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கிளாம்பாக்கம்: அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மற்றும் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில், இந்த ஸ்கை வாக் அமைக்கப்பட உள்ளது... அதேபோல எஸ்கிலேட்டர்கள், லிப்ட்கள் போன்றவைகளுடன் கூடிய, நடை மேம்பாலமும் அமைய உள்ளது.
கிளாம்பாக்கத்துக்கு ஸ்கைவாக் வந்துவிட்டால், பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எளிதாகவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட முடியும்.. இதனால் நேரம் மிச்சமாவதுடன், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேல் இந்த ஸ்கைவாக் அமைய இருப்பதால் , சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது...
ஆம்னி பஸ்கள்: அந்தவகையில், 74 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார்... கடந்த 2 நாட்களாகவே, கிளாம்பாக்கம் ஸ்கைவாக் எப்படி இருக்கும் என்பது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.. அந்த மாதிரி குறித்த கட்டிட வடிவமைப்புகள் மக்களை ஈர்ப்பதுடன், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
மற்றொரு பக்கம், ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்காக முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் நிறுத்துமிட பணிகளும் துரிதமாகி வருகின்றன.. அதேபோல, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்குவது தொடர்பான ஆலோசனைகளும் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகாரிகள்: நேற்றைய தினம்கூட, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்... அப்போது, கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்து ஆம்னி பஸ்களை தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும், முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ்களுக்கான நிறுத்துமிடப் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.. ஆம்னி பஸ்களுக்கு அதிகளவு அபராதம் விதிக்கக் கூடாது என்ற உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக தெரிகிறது.
முடிச்சூர்: முன்னதாக, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சென்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறுத்தம் தயாராகும் என உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்கள்.
கிளாம்பாக்கத்திலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பஸ்களுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஏற்கனவே உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications