கிறங்கடிக்கும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு.. 100 தாழ்தள அரசு பஸ்.. சிஎம்டிஏவுக்கு லெட்டர்.. நிம்மதி
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் வசதிகள் கோரி வரும்நிலையில், 100 தாழ்தள அரசு பஸ்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டிருப்பினும், மாநகர பஸ்கள் உட்பட மேலும் சில அடிப்படையான வசதிகளையும் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து எழுந்துவருகின்றன..

ஆம்னி பஸ்கள்: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டில் இருந்தபோதே, காலை 7 மணிக்கு மேல் சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.. அது பீக் ஹவர் என்பதால், ஒரு சில பஸ்கள் மட்டும் உள்ளே வந்துசெல்லும்.. ஆனால், இப்போது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே பயணிகள் இறங்கி, பஸ்கள் வழியாக மட்டுமே சென்னைக்குள் வர முடியும்.. அதனால்தான், இணைப்பு போக்குவரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், ஆம்னி பஸ்களுக்கு இடவசதியில்லை.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியிருக்கிறது.. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
100 பஸ்கள்: மேலும், கிளாம்பாக்கத்தில் முழு வசதிகள் செய்து தரும்வரை, கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், வெளியூர் செல்வோர் வசதிக்காக, 100 தாழ்தள பஸ்கள் வாங்க வேண்டும் என்பதால், 91 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும் என்று கேட்டு எம்டிசியான மாநகர போக்குவரத்து கழகம், சிஎம்டிஏவுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அந்த கடிதத்தில், "சென்னையில் இப்போதைய நிலவரப்படி, தினமும், 659 வழித்தடங்களில், 3,233 நடைகள் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் தேவை அதிகரித்திருக்கிறது.. இதனால், கிளாம்பாக்கத்துக்கு மக்கள் சென்று வருவதற்கு தினமும், 298 பஸ்களை, 2,990 முறை இயக்க வேண்டியுள்ளது. இதற்காக வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள், கிளாம்பாக்கத்துக்கு மாற்றி விடப்பட்டுள்ளன..
அதிக சுமை: இந்நிலையில், அதிக சுமைகளுடன் வெளியூர் செல்வோரின் தேவையை கருதி, அதிநவீன வசதிகள் உடைய, 100 தாழ்தள பஸ்கள் வாங்க திட்டமிட்டு, தமிழக அரசு வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால், புதிய பஸ்கள் வாங்கும் செலவை சமாளிக்க, 91 கோடி ரூபாயை, சிஎம்டிஏ நிதியில் இருந்து கொடுத்து உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications