கிளாம்பாக்கத்தில் மீண்டும் மாற்றம்? ஜிஎஸ்டி ரோடில் விழுந்த கோரிக்கை! அதைவிடுங்க, திருவள்ளூர் குஷி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்து முக்கிய கோரிக்கை ஒன்று கிளம்பியிருக்கிறது. அதேசமயம் ஒரு மகிழ்ச்சி செய்தியும் வெளியாகியிருக்கிறது.
இந்த வருட துவக்கத்திலிருந்தே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அவசர கதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து ஆதங்கம் வெளிப்பட்டது..

ரயில்வே துறை: அதிலும், பொங்கல் பண்டிகை நேரத்தில் போதுமான பஸ்களும் இல்லை என்றுகூறி நள்ளிரவிலேயே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தையும் பயணிகள் செய்தார்கள். இதையடுத்து தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டதையடுத்து, சர்ச்சைகளை முடிவுக்கு வந்தன.
இருந்தபோதிலும் கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையான தீர்வு காண முடியவில்லை. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் அமைய போகிறது.. கே.சி.பி.டி. மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது..
அதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாளில் அறிக்கை அளிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 4 நாட்களுக்கு முன்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கூடுதல் வசதி: இப்படிப்பட்ட சூழலில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் கூடுதல் வசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.. அதாவது, பஸ் ஸ்டாண்டின் முன்பு நடுரோட்டிலேயே பஸ்களை நிறுத்தி இறக்கி விடுவதால், பயணிகள் சாலையை கடக்கிறார்கள்.. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாய நிலைமை உள்ளதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, ஜிஎஸ்டி சாலையின் நடுவிலேயே நிறுத்தி இறக்கி விடுவதால், பயணிகள் மாநகர பஸ்களை பிடிப்பதற்காக குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் கடக்கிறார்கள். இதனால் வாகனங்களும் நிலைதடுமாறி முட்டி மோதி நிற்கின்றன.
சிக்னல்கள்: நைட் நேரங்களில் இங்கு லைட் வசதியும் இல்லை.. சிசிடிவி கேமராவும் இல்லை. அதனால், இந்த சாலையில் தடுப்புகளை அகற்றிவிட்டு சிசிடிவி கேமராக்களுடன் சிக்னல் அமைக்க வேண்டும்.. பாதுகாப்பு பணியில் போக்குவரத்து துறை போலீசாரையும் அமர்த்த வேண்டும்.. அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும்..
இல்லாவிட்டால், 300 மீட்டர் அருகிலேயே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னல் வளைவில் சென்று மறுபடியும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வந்து பயணிகளை இறக்கி விட்டுச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அந்தவகையில், கிளாம்பாக்கத்தில் புதிய வசதிகளை அரசு மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
சபாஷ்: இதனிடையே, கிளாம்பாக்கம் - திருவள்ளூர் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. அந்தவகையில், திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து தடம் எண் 297 என்ற பேருந்து 05.00, 07.00, 09.00, 11.00, 13.00, 15.00,17.00, 19.00 நேரங்களில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திருவள்ளூர் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications