கூடுவாஞ்சேரி டூ வண்டலூர்.. வாரே வா.. கிளாம்பாக்கம் பிளான் பக்கா.. "டபுள் ரூட்" எடுத்த தமிழ்நாடு அரசு
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில், 393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் தயாராகி உள்ளது..

பிரமாண்டமான முறையில் இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது..
வண்டலூர்: "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. எப்படியும் ஜூலை மாதத்துக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டவுடன் ஏற்படக்கூடிய செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
கூட்டம்: ஆனாலும், சென்னையில் பெய்த மழையால், கிளாம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது.. இது தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில், இன்று மீண்டும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்..
இந்த பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மற்றும் வனத் துறையுடன் ஒருங்கிணைந்த ஆலோசனை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
2 வழித்தடங்கள்: இதில், கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பஸ்களை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பஸ்கள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. மேலும், கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல 2 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை - போலீஸ் அகாடெமி சாலை - நல்லம்பாக்கம் சாலை - ஊனமாஞ்சேரி - ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும் மற்றும் கூடுவாஞ்சேரி - மாடம்பாக்கம் சாலை - ஆதனுர் நெடுஞ்சாலை முதல் மாடம்பாக்கம் சாலை - யூனியன் சாலை - வண்டலுர் - வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications