கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளிக்கு முன்போ அல்லது பின்போ திறக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தலைநகர் சென்னையில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், வண்​டலூரை அடுத்த கிளாம்​பாக்​கத்​தில் புதிய பேருந்து நிலை​யம் அமைக்கப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்​பரில் திறக்​கப்​பட்​டது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.

Kilambakkam Railway Station

சென்னையின் உட்புறப் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு செல்ல நகர பேருந்து வசதி மட்டுமே உள்ளது. ரயில் வசதி நேரடியாக இல்லை. இந்த பேருந்துகளில் எப்போதும் அதிகளவிலான கூட்டம் இருந்து வருகிறது. விழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நகர பேருந்துகளில் அதிக கூட்டம் இருக்கும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலை​யத்​தின் அரு​கில், தாம்​பரம் - செங்​கல்​பட்டு ரயில் பாதை இருக்​கிறது. இருப்​பினும், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலை​யம் இல்​லை. இதனால் இங்கு மின்​சார, விரைவு ரயில்​களை நிறுத்த முடி​யாத நிலை இருக்​கிறது. இங்கு ரயில் நிலை​யம் அமைக்க பயணி​கள் தரப்​பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, ரூபாய் 20 கோடி மதிப்​பீட்​டில் வண்​டலூர் - ஊரப்​பாக்​கம் இடையே கிளாம்​பாக்​கத்​தில் புதிய ரயில் நிலை​யம் அமைக்​கப்​படு​வதற்கு தெற்கு ரயில்​வே சென்னை ரயில்வே கோட்​டம் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்​டோபரில் ஒப்​பந்​தப்​புள்ளி கோரியது. இதையடுத்​து, ஒப்​பந்​தம் வழங்கப்​பட்​டு, ரயில் நிலை​ய கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கி, அனைத்து பணி​களும் நிறைவடைந்​து​விட்​டன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் நிலை​யத்​தை​யும் ஜிஎஸ்டி சாலை​ யின் மறு​புறம் அமைந்​துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலை​யத்​தை​யும் இணைக்​கும் வகை​யில், பிரம்​மாண்ட ஆகாய நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி நடை​பெற்றது.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், "மூன்று நடைமேடைகளுடன் ரயில் நிலையம் கட்டும் பணி நிறைவடைந்து இருக்கிறது. தண்டவாள பணிகளும் நிறைவடைந்து விட்டது.

தற்போது ஆகாய நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவும் 30 சதவீத பணி நிறைவடைந்து விட்டது. இதை மாநில அரசு செய்து வருகிறது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரயில் நிலையம் திறந்த பின்னர் அதை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+