கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் டூ பஸ் ஸ்டாண்ட்.. ஆகாய நடைமேடை! இப்படித்தான் இருக்க போகுதாம்
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு செல்ல ஆகாய நடைமேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நடைமேடை எப்படி இருக்கும் என்பது தொடர்பான கிராபிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் சென்னை மார்க்கெட் அருகே இருந்த பேருந்து நிலையத்தில் இயங்கி வந்தன. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கவும் அரசு முடிவு செய்தது.
நகரும் படிக்கட்டுகள்: நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவையுடன் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைய உள்ளது. இதனிடையே, இந்த நடைமேம்பாலத்தின் கிராபிக் படங்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தில் உள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பட இருக்கும் ஆகாய நடைமேம்பாலம் மூலம் மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நேரடியாக சென்று விட முடியும்.
12 மாதத்திற்குள் முடிக்க: இந்த ஆகாய நடைபாலம் அமைய இருப்பதால், சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழல் பயணிகளுக்கு ஏற்படாது. பயணிகள் லக்கேஜ்களை கொண்டு செல்ல ஏதுவாக மிகவும் விரிவாக இந்த நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தின் கிராபிக் வீடியோ படங்கள் பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
மேலும் லிப்ட், நகரும் படிக்கட்டு வசதிகளும் வருகின்றன. நடைமேம்பால பணியை அடுத்த 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய ரயில்நிலையம் அமையும்போது நடை மேம்பாலம் பணியும் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளால் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இந்த பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. தற்போது முழு அளவில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பக்கத்திற்கு பயணிகள் வந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசின் நிதியில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications