கிறுகிறுக்க வைத்த கிளாம்பாக்கம்.. ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் எல்லாம் போச்சு.. இப்படி போனா அவ்வளவுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கியப் போக்குவரத்து முனையமாக விளங்கும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துடன் இணைக்கும் ஸ்கைவாக் திட்டம், மீண்டும் ஒருமுறை தள்ளிப்போய் உள்ளது.

முதலில் ஏப்ரல் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜூன், ஆகஸ்ட் எனத் தொடர்ந்து தள்ளிப்போன இந்தத் திட்டம், தற்போது டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kilambakkam Skywalk

வெளியூர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் கிளாம்பாக்கம் முனையத்தில், ரயில் நிலைய - பேருந்து நிலைய இணைப்பிற்கான கட்டமைப்பு இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.

இக்குறையைப் போக்கி, பயணிகள் ஆபத்தின்றி ஜிஎஸ்டி சாலையைக் கடக்கவும், தடையற்ற போக்குவரத்தைப் பெறவும் ரூபாய் 79 கோடி மதிப்பீட்டில் இந்த பிரம்மாண்ட ஸ்கைவாக் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சித் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

3 கட்டப் பணிகள்: தற்போதைய கள நிலவரம்

சென்னை பெருநகர வளர்ச்சித் குழும அதிகாரிகளின் தகவல்படி, இந்த ஸ்கைவாக் திட்டம் மூன்று முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது:

ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு செல்லும் பாதையின் மேலே முதலாவது டெக் அமைத்தல்.
தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் இரண்டாவது டெக் அமைத்தல்.
தனியார் நிலக் கையகப்படுத்துதல் மூலம் ரயில் நிலையத்தை நேரடியாக இணைக்கும் மூன்றாவது டெக் அமைத்தல்.

தற்போது ஜிஎஸ்டி சாலையில் முதல் ராட்சத இரும்பு தூண் நிறுவப்பட்டுவிட்டது. மேலும், பேருந்து முனையப் பகுதியில் மின்தூக்கிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ரயில் நிலையத்தை இணைக்கும் பணிகளில் வெறும் 20 சதவீத வேலைகள் மட்டுமே இதுவரை முடிவடைந்துள்ளன.

தாமதத்திற்கு என்ன காரணம்?

இந்தத் திட்டம் மீண்டும் மீண்டும் தள்ளிப்போவதற்கு இரண்டு முக்கிய அனுமதிகள் நிலுவையில் இருப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது:

போக்குவரத்துக் காவல்துறையின் அனுமதி:

ஜிஎஸ்டி சாலையின் நடுவே இரண்டாவது டெக் அமைப்பதற்கு வாகனப் போக்குவரத்தை தற்காலிகமாக மாற்றியமைக்க வேண்டும். இதற்கான முறையான அனுமதியை சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை இன்னும் வழங்கவில்லை.

தென்னக ரயில்வேயின் அனுமதி:

ரயில் பாதைகளுக்கு மேலே இரும்பு தூண்களை பொருத்துவதற்கும், பிளாட்ஃபார்ம் கட்டுவதற்கும் தென்னக ரயில்வேயின் ஒப்புதல் அவசியம்.

தண்டவாளங்களின் மேல் பணிகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் 5 மணி நேர ரயில் போக்குவரத்து நிறுத்த அனுமதி தேவைப்படுவதால், ரயில்வே நிர்வாகம் இன்னும் இறுதி அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.

பயணிகளின் தொடர் அவதி மற்றும் கோரிக்கை

தற்போது புறநகர் ரயில்கள் மூலம் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் வரை வரும் பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைய ஆட்டோ அல்லது வாடகை கார்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு, கூடுதல் செலவும் ஏற்படுகிறது.

மேலும், அதிவேகமாக வாகனங்கள் செல்லும் ஜிஎஸ்டி சாலையைக் கடந்து பேருந்து நிலையத்திற்குச் செல்ல பொதுமக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நிலையும் தொடர்கிறது.

இந்த டிசம்பர் மாத காலக்கெடுவுக்கு உள்ளாவது கிளாம்பாக்கம் ஸ்கைவாக் திட்டம் முழுமையாக முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருமா என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+