கிளாம்பக்கம் ரயில்வே ஸ்டேஷன்.. தெற்கு ரயில்வே கொடுத்த மேஜர் அப்டேட்.. பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களில் சென்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிபார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகம் உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், தொலை தூரங்களுக்கும் செல்ல அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தனியார் ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேன்டும் என்று அரசு உத்தரவிட்டது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: இதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே தற்போது அனைத்து பேருந்துகளும் இயக்கப்பபட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்திற்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வேயும் தொடங்கியுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக ஆகாய நடைபாதை வாயிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் நடைபாதையும் கட்டப்பட உள்ளது.
ரயில்வே அதிகாரி விளக்கம்: தற்போது கிளாம்பாக்கம் செல்வதற்கு கோயம்பேட்டில் இருந்து தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் புறநகர் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் சிரமம் இன்றி கிளாம்பாக்கம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மார்ச் மாதம் முதல்: இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் , கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பற்றி கூறியுள்ளார். ஆர்.என். சிங் கூறியதாவது:- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கத்தில் ரயில்கள் நின்று செல்லும். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பயணிகள் மகிழ்ச்சி: பணிகளை தமிழக அரசு முடித்ததும் ரயில் நிலையம் கட்டும் பணி தொடங்கும்" என்றார். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று வெளியாகியிருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகளில் செல்வது என்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: கோயம்பேட்டில் இருந்து 70 V என்ற வழித்தடத்தில் தாம்பரம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல 104 சி என்ற வழித்தடத்தில் போரூர் டோல் கேட், மதுரவாயல் வழியாக புறவழிச்சாலையிலும் கிளாம்பாக்கத்திற்கு கோயம்பேட்டில் இருந்து இயங்குகிறது.
எனினும், பேருந்தில் சென்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிபார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகம் உள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications