"சார்ஜ் போட காசு இல்லை.." வீதி வீதியாக பிச்சை எடுக்கும் ரோபோ.. அதிர்ந்து போன சீன மக்கள்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ரோபோக்களை வைத்துக் கொண்டு பல அதிநவீன நாம் கனவிலும் நினைக்காத வேலைகளைச் செய்து நாம் பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் சிலர் ரோபோவை பிச்சை எடுக்க பயன்படுத்துகிறார்கள். அங்குப் பிரதான வீதியில் அமர்ந்து கொண்டு மக்களைப் பார்த்துக் கைகூப்பி பிச்சை கேட்கும் ரோபோ ஒன்றின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு நடைபாதையில், மனித உருவிலான ரோபோ ஒன்று மண்டியிட்டு அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இப்போ தான் ரோபோ நிறைய இடங்களில் இருக்கிறதே.. இதை மட்டும் ஏன் டிரெண்ட் செய்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஏனென்றால் இந்த ரோபோ செய்ய முடியாத வேலையை எல்லாம் செய்யவில்லை.. மாறாக ரோபோ இதைச் செய்யுமா என நாம் யோசிக்காத வேலையைச் செய்கிறது.

China world robot

பிச்சை எடுக்கும் ரோபோ

அதாவது அந்த ரோபோ தனது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பாதசாரிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுக்கும் வீடியோ தான் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த ரோபோ ஒரு முழங்காலை மடித்து தரையில் அமர்ந்து, தனது கைகளைக் கூப்பி, அங்கு நடந்து செல்லும் பாதசாரிகளைப் பார்த்துக் குனிந்து வணங்குகிறது. அந்த ரோபோவுக்கு முன்னால் ரொக்கப் பணத்தைப் போடுவதற்காக ஒரு சிறிய தட்டும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக ஒரு க்யூஆர் கோடும் வைக்கப்பட்டுள்ளன.

ரீசார்ஜ் செய்யக் காசு இல்லை

மேலும், அந்த ரோபோ உடலில் ஒரு எல்இடி போர்ட் கூட இருக்கிறது. அந்த போர்ட்டில் "ரீசார்ஜ் செய்யப் பணம் இல்லை" மற்றும் "தயவுசெய்து மின்சாரக் கட்டணம் செலுத்த உதவுங்கள்" என்ற வாசகம் வருகிறது. அங்கிருந்த ஸ்பீக்கரிலும் இதுபோல ரீசார்ஜ் செய்யக் காசு இல்லை.. பணம் கொடுத்து உதவுங்கள் என்ற வாசகம் வருகிறது.

இந்த ரோபோ சீனாவின் பிரபல ரோபோட்டிக்ஸ் நிறுவனமான யூனிட்ரீ தயாரித்த 'யூனிட்ரீ ஜி1' என்ற மாடல் ஆகும். இதே நிறுவனத்தின் மற்றொரு ஜி1 ரோபோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈக்வடார் நாட்டில் உள்ள சிம்போராசோ எரிமலையின் மீது ஏறி சாதனை படைத்து உலக அளவில் பரவலாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

A video of a Unitree G1 humanoid robot begging for money to pay its electricity bill in Sichuan(சீனாவில் பிச்சை எடுக்கும் ரோபோ): Humanoid Robot Begging latest news in tamil.

நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இதைப் பார்த்த மக்கள் பல்வேறு விதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சில நெட்டிசன்கள், தற்போதைய நவீன உலகில் பிச்சை எடுக்கும் தொழிலைக் கூட ரோபோக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன என்றும் இதனால் மனிதர்களை ஏஐ ரோபோக்கள் வெல்லும் காலம் நெருங்கிவிட்டது என்கிறார்கள்.

வேறு சிலர், இது ஒரு புதிய வகையான விளம்பர யுக்தி என்கிறார்கள். அதாவது ரோபோவை வேறு எந்த விதத்தில் காட்சிப்படுத்தி இருந்தாலும் இவ்வளவு தூரம் கவனத்தை ஈர்த்திருக்க முடியாது. ஆனால், பிச்சை எடுக்க வைத்ததன் மூலம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துவிட்டனர் என்று சொல்லி வருகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், அந்த வீடியோவில் கடந்து செல்லும் பாதசாரிகள் சிலர் அந்த ரோபோவின் தட்டில் நாணயங்களைப் போடுவதையும், சிலர் தங்கள் மொபைல் போன் மூலம் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதையும் பார்க்க முடிகிறது.

முதல்முறை இல்லை

அதேநேரம் இது போன்ற சம்பவங்கள் சீனாவில் நடப்பது இது முதல்முறை இல்லை. பெய்ஜிங், செங்டூ மற்றும் புஜோ போன்ற சீன நாட்டின் முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற "ரோபோ பிச்சைக்காரர்கள்" நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. அவை பெரும்பாலும் "எனது மொபைலை சார்ஜ் செய்ய என்னிடம் பணம் இல்லை" போன்ற வாசகங்களைக் கொண்டு பிச்சை எடுப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+