காஞ்சிபுரத்தில் ஆண் நண்பருடன் தனிமையில் இளம்பெண்.. கசிந்த படம்.. 3 பேர் சிக்கியது எப்படி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இளம்பெண் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி, அத்துமீறலில் ஈடுபட்டதுடன் 25 லட்சம் பணம் பறித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் உட்பட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கணவருக்கு தகவல் தெரிந்ததால் மனைவி ஆசிட் குடித்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் முன்பின் தெரியாதவர்களுடனோ அல்லது பழைய நண்பர்களுடனோ பேசுவது மிக எளிதாகிவிட்டது. இது ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கி, பல நேரங்களில் தவறான உறவாக மாறுகிறது. அதேபோல் கணவன்-மனைவிக்கு இடையே போதிய நேரத்தைச் செலவிடாதது, உணர்வுப்பூர்வமான ஏமாற்றம், ஒருவருக்கொருவர் மதிப்பளிக்காதது போன்ற காரணங்களால், வெளியில் கிடைக்கும் தற்காலிக ஆறுதலை நோக்கி சிலர் ஈர்க்கப்படுவதும் நடக்கிறது. அப்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை சிலர்மிரட்டி பணம் சம்பாதிப்பது, அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அவரது கணவரின் உறவினர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி மறைவான பகுதிகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி அந்த இளைஞர்கள் அந்த பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்தார்களாம்.
இதனால் அந்த பெண் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு அவ்வப்போது பணம் அளித்துள்ளார். அந்தப் பெண் சிறுக சிறுக ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணம் அளித்த நிலையில் மீண்டும் அவர்கள் ஐந்து லட்சம் பணம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக ரூபாய் 5 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடுத்த நிலையில் அதை அந்த இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் கட்டாதது குறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார், அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த பெண் பணம் கொடுத்த விவகாரம் குறித்து கணவரிடம் தெரிவித்தார். இதன்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன்சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ், மார்ட்டின் டேனியல், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.முக்கிய அறிவிப்பு
மன அழுத்தம், தற்கொலை எண்ணம் அல்லது ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தால், தனிமையில் வருந்தாமல் உடனடியாக உதவிக்குத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன:
ஹெல்ப்லைன் (சினேகா): 044-24640050 (24 மணி நேரமும் செயல்படுகிறது)
தமிழக அரசின் மனநல உதவி எண்: 104
வழிகாட்டி (Vandrevala Foundation): 9999 666 555














Click it and Unblock the Notifications