வேடிக்கை பார்க்க மாட்டோம்.. GenZ DMK அன்பானந்தன் அரியப்பனுக்காக நேரடியாக களம் இறங்கிய உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

Udhayanidhi has directly stepped into the field for Gen Z DMK s Anbanandhan Ariyappan

இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.

கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது... இது தான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற சோபா மாடல் அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள். கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

இளைஞர்களைக் கண்டு தொடைநடுங்கும் தவெக முதல்வரும், நிழல் முதல்வர்களும் என்ற பெயரில் திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில்,"​GenZ DMK என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. அன்பானந்தன் என்பவரை நள்ளிரவில் ராயக்கோட்டை போடம்பட்டி வீட்டில் புகுந்து, பெற்றோரிடம் அத்துமீறி வாக்குவாதம் செய்து அராஜகமாகக் கைது செய்ய முயன்ற தவெக அரசின் பாசிச வெறி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

​சினிமா வெளிச்சத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஏமாற்றலாம் என்ற உங்கள் பகல்கனவை உடைத்து, தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு தோலுரிக்கும் GenZ இளைஞர்களைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்?

​உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே ஆபாசமாகத் திட்ட ஆன்லைன் ரவுடிகளை ஏவுவது, அல்லது நள்ளிரவில் போலீஸை அனுப்புவதுதான் உங்களின் மாற்று அரசியலா? விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு 'தொடைநடுங்கி' அரசாங்கம் உங்களுடையது!

​கேமரா முன் "ஜனநாயகம், கருத்துரிமை" என்று மனப்பாடம் செய்த வசனத்தைப் பேசிவிட்டு, இருட்டில் போலீஸை ஏவி மிரட்டுவதுதான் அப்பட்டமான சர்வாதிகாரம் மற்றும் உண்மையான பாசிசம் CM சார்! அதிகார வெறிகொண்டு குரல் எழுப்பும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் உங்களது கோழைத்தனமான அரசுக்கு, வெகு விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+