விரைவில் பதிலடி.. GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனுக்காக கொதித்து எழுந்த கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பனின் வீட்டுக்குள் நள்ளிரவில் போலீஸ் நுழைந்து அவரை கைது செய்ய முயன்றதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாருடன் திமுகவினர் அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்ட திமுகவினர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

GENZ DMK coordinator Anbanandhan Ariyappan midnight arrest row kanimaozhi opposes TVK Govt

"எங்க அப்பாவ காணோம்" என முதல்வர் விஜய்யின் மகன் கேட்பது போலவும், அவரது அப்பா நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தார் என்பது போலவும் தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பன் பேசி நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை தொடர்ந்தே தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய போலீசார் முயற்சித்ததாகவும் திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு முழுவதும் திமுக சட்டத்துறையினருடன் ஆலோசித்து, அன்பானந்தன் மீதான வழக்கை, கழகம் முறைப்படி எதிர்கொள்ள அறிவுறுத்தியதாக திமுகவினர் கூறுகிறார்கள். எந்தப் பெண்ணை அன்பானந்தன் இழிவுபடுத்தி விட்டார்? அது பற்றி சம்பந்தப்பட்ட பெண் யாராவது புகார் கொடுத்திருக்கிறாரா? தவெக எம்.எல்.ஏ மீது வெளிப்படையாகவே பாலியல் குற்றம் சாட்டிய அதே கட்சியின் பெண் தந்த புகாருக்கு விஜய் அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதனிடையே போலீசார் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்யவில்லை என்றும், திரும்பச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+