GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை
கிருஷ்ணகிரி: GENZ DMK கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான 'அன்பாநந்தன் அரியப்பன்'ஐ கைது செய்ய நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது கிராமத்தில் போலீசார் வருகை தந்தனர். அப்போது போலீசாருடன் அன்பானந்தன் அரியப்பனின் உறவினர்கள் என்ன தவறு செய்தார் என்று கைது செய்ய பார்க்கிறீங்க என்று சராமரியாக கேள்வி எழுப்பினார்கள். அதுவும் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக திமுக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பதிவில், அரசியல் அமைப்பு சட்டம் ஆர்டிகிள் 19(1) ஏ படி ஒவ்வொரு இந்தியருக்கு பேசுவதற்கு உரிமை உண்டு.. ஆனால் அன்பாநந்தன் அரியப்பன் GENZ DMK டீமில் ஒருவர். இவரை இரவோடு இரவாக கைது செய்ய போலீஸ் படை சுற்றி வளைத்துள்ளது. அவர்களிடம் வாரண்ட் இல்லை.. வீடியோவாக ரெக்கார்ட் செய்ய முன்றால், ரெக்கார்ட் செய்யவும் முடியாது என்று போலீசார் கூறியதுடன், கைது செய்தே தீருவோம் என்று கூறியிருக்கிறார்கள்..

குறைந்தபட்சம் அந்த வாரண்டை காண்பியுங்கள்.. அந்த வாரண்டில் என்ன இருக்கிறது என்று கேட்டோம்.. எங்கள் சட்டகுழுவின் உதவியுடன் செயல்பட முயன்றோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.. அன்பாநந்தன் அரியப்பனை கைது செய்து எங்கே கூட்டி செல்வார்கள் என்று கூட சொல்லவில்லை... அவர்களின் நோக்கம் கைது செய்ய வேண்டும் என்பது தான்.. எனவே ஒவ்வொருவரும் அன்பாநந்தன் அரியப்பனுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனிடையே திமுக ஆதரவாளரான யு2 புருட்டோஸ் ளியிட்ட எக்ஸ் தள பதிவில், "Gen z dmk வின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை கைது செய்ய நள்ளிரவு 1 மணிக்கு அவரின் வீட்டை சுற்றி போலீஸ் படையை இறக்கியுள்ளது பாசிஸ்ட் விஜய் ஆட்சி... DSP உட்பட எண்ணற்ற போலீஸ் அவரின் வீட்டில் உள்ளவர்களை மிரட்டியுள்ளது..
அரெஸ்ட் வாரண்ட்டோ, எப்ஐஆர் காப்பியோ எதுவும் உரியவர்களிடம் காண்பிக்கவுமில்லை.. Gen z dmk வை பார்த்து விஜய் பயந்து நடுங்கியிருக்கிறார்.. எந்த கேள்விகேட்டாலலும் 6 மாசம் பொறுத்துக்கோங்கன்னு சொல்லுகிற கூட்டணி கட்சிகள் இந்த பாசிச போக்கை கைகட்டி வேடிக்கை பார்க்க போகிறார்களா??இதற்கும் 6 மாசம் காத்திருங்கள் என்று சொல்ல போகிறார்களா?? இதுதான் அம்பேத்கர் கண்ட கனவா?" காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன் கைது செய்வதற்காக அங்கு சென்றார்களா அல்லது என்ன நடந்தது என்று அதிகாரப்பூர்வமான தகவலை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. அவர்கள் வெளியிட்டால் தான், என்ன வழக்கு, என்ன பிரச்சனை என்பது முழுமையாக தெரியவரும். திமுக ஆதரவாளர்கள் கூறும் போது, கடும் எதிர்ப்பு காரணமாக போலீசார் கைது செய்யாமல் திரும்ப சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.














Click it and Unblock the Notifications