கும்ப ராசியினருக்கு உத்யோகத்தில் செம மாற்றம்.. தொட்ட காரியம் ஜெயம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி (ஆனி 10 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Kumbam lucky zodiac signs rasi palan

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், மகரம், கும்ப ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி (ஆனி 10 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். இழுபறியான காரியங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். யோக பலன்கள் வீடு தேடி வரும். மனக்கசப்புகள் நீங்கும். தொழிலில் ஏற்றம் இருக்கும்.

சுபகாரியத் தடை

மருத்துவத்துறையில் உள்ள அனைவருகும் இது வெற்றிகரமான வாரமாக இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சுப காரிய தடைகள் விலகி அடுத்தடுத்து விசேஷங்கள் நடைபெறும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும் வாரம் இது. குழந்தைகள் மூலம் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கவனம்

கடன் சுமை குறையும். சுப செலவுகள் உண்டு. புதிய கடன் கிடைக்கும். வீட்டை புனரைமைக்கும் பணி நடக்கும். வண்டியில் மாற்றங்கள் உண்டு. மறைந்த எதிரிகள் முன்னேறி உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வாய்ப்புள்ளது. எதிரிகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. விட்டு கொடுத்து செல்வது சுபம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும்.

வழிபாடு

தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. வயிறு உபாதை, கழிவு பாதைகளில் தொந்தரவுகள் ஏற்பட கூடும். விஷ ஜந்துக்கள், நாய்க்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முருகர் வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+