தான்சானியாவில் ஒரு "வீர ராகவன்".. என்னா ஆக்டிங், டான்சிங்.. பீஸ்ட் மோடில் கலக்கிய கிலி பால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் டிரெய்லரில் வந்த சில காட்சிகளில் டான்சானியாவின் கிலி பால் நடித்துள்ளது வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் அலமாதி அபிபூ பாடலுக்கும் கிலி பாலும் அவரது தங்கை நீமா பாலும் நடனமாடியுள்ளார்கள். இன்ஸ்டாகிராம் எனும் சோஷியல் மீடியாவில் தற்போது பிரபலமடைந்த பாடல்களுக்கு நடனமாடி வருவது பேமஸ் ஆகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள், குழந்தைகள், சிறுவர்கள், நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என பிரபல பாடல்களுக்கு நடனமாடி வருகிறார்கள். அந்த வகையில் ரீல்ஸ் மூலம் இந்தியாவில் புகழ்பெற்றவர்கள் டான்சானியா நாட்டை சேர்ந்த கிலி பால், இவரது தங்கை நீமா பால் ஆகியோர் ஆவர்.

பழங்குடியினம்

பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார்கள். சிறு வயதிலிருந்தே இந்தி மொழி இருக்கும் பற்று காரணமாக தற்போது இந்தி மொழி மட்டுமல்லாமல் நிறைய பிராந்திய மொழி பாடல்களுக்கு வாய் அசைத்து ரீல்ஸ் செய்து வருகிறார்கள். மேலும் மொழியே தெரியாமல் ஒவ்வொரு பாடலுக்கும் இவர்கள் பாடுவதும் ஆடுவதும் அப்பப்பா.. நிறைய ரசிகர்கள் உள்ளார்கள்.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி பாராட்டு

இவர்களது திறமையை பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். அண்ணனும் தங்கையும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் 430 போஸ்ட்களைதான் போட்டுள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு 3.6 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இந்தி பாடல்களுக்கு அட்டகாசமாக நடித்த இவர்கள் பிரபல படங்களின் வசனங்களையும் விட்டு வைப்பதில்லை.

டிரெய்லர்

மேலும் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியான போது கிலி பால் தனது பாரம்பரிய ஆடைக்கு பதிலாக விஜய் போல் கோட் சூட் அணிந்து கொண்டு கையில் கோடாரியுடன் என்ட்ரி கொடுத்தார். அப்போது வீர ராகவன் என பெயர் சொல்லப்படுகிறது. பேக்கிரவுண்ட் மியூசிக்கில் திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும்... என்ற பாடல் பிளே செய்யப்பட்டுள்ளது.

தளபதி விஜய்

தளபதி விஜய் என்ற டைட்டில் வருகிறது. விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்வது போல் கிலியும் ஒருவரை கத்தியால் குத்துவது போல் நடிக்கிறார். அப்படியே பீஸ்ட் டிரெய்லர் பார்ட் 2 மாதிரி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை சன் பிக்சர்ஸுக்கு டேக் செய்துள்ளார் கிலி. மேலும் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கை யூஸ் செய்துள்ளார். அது போல் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் அலமாதி அபிபூ பாடலுக்கும் பாரம்பரிய உடையில் நடனமாடியுள்ளார்கள். ஆடல், பாடல் மட்டுமல்லாமல் கிலிக்கு நடிப்பும் நன்றாக வருகிறதே. இப்படி ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்த கிலியை மர்ம நபர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+