கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு
கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வலியுறுத்தி ஈச்சனாரியில் அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மறுபரிசீலனை செய்து பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.

2021 சட்டடபை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் சி.சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக, மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறது.
இவற்றில், பாஜக 2021-ல் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. அவினாசி தனி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர். மறுபரிசீலனை செய்து பாஜகவிற்கு ஒதுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வலியுறுத்தி ஈச்சனாரியில் அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications