ECR, OMR-ன் ராஜா.. ரியல் குபேரன் ஆதித்யாராம்! சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா!
சென்னை: வளர்ச்சின்னா இப்படித்தான் இருக்கனும் எனும் சொல்வதற்கு உரிய நபர்தான் ஆதித்யாராம். இவரது சொத்து மதிப்பு வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆதித்யாராம் பிராப்பர்டீஸ், ஆதித்யாராம் ஹவுசிங், ஆதித்யாராம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என இவர் பல துறைகளில் முதலீடு செய்து வருகிறார். ரொம்பவும் சாதாரண மனிதராக வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு மற்றும் திரைப்படத் தயாரிப்பு எனப் பல துறைகளில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
ரியல் எஸ்டேட் துறையின் ராஜா
இவர் ECR மற்றும் OMR-ன் ராஜாவாக தற்போது மாறியிருக்கிறார். சென்னை மட்டுமல்லாது ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சொகுசு ரியல் எஸ்டேட் துறையின் முகத்தையே இவர் மாற்றி வருகிறார். ஆதித்யாராம் குழுமத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் பல மைல் கற்களை எட்டியுள்ளார்.

ஆதித்யாராம் குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள்
தொலைநோக்கு பார்வையுடன் இவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கிறார். ஆதித்யாராம் பிராப்பர்டீஸ், ஆதித்யாராம் ஹவுசிங், ஆதித்யாராம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி, ஆதித்யாராம் மூவிஸ், ஆதித்யாராம் பேலஸ் மற்றும் ஆதித்யாராம் ஸ்டுடியோஸ், ஆதித்யாராம் மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் அரண்மனை ஆகிவை இவருக்கான அடையாளமாக இருக்கிறது.
அடையாளமாக மாறிய ஆதித்யாராம் அரண்மனை
அதிலும் குறிப்பாக சென்னை ECR-ல் அமைந்திருக்கும் ஆதித்யாராம் பேலஸ், தென்னிந்தியாவின் மிகப்பெரிய குடியிருப்பு அரண்மனையாகும். சுதந்திரத்திற்கு பிறகு கட்டப்பட்ட முதல் அரண்மனையாக இது இருக்கிறது. இது இந்தியாவின் ராஜ வம்ச காலத்தின் கம்பீரத்தையும், நவீன நேர்த்தியையும் பிரதிபலிக்கிறது. திரைத்துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது.
திரைத்துறை பங்களிப்பு
ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி: சென்னையில் முன்னணி திரைப்படத் தயாரிப்பு ஸ்டுடியோக்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இங்கு ஜெயிலர் 1 & 2, கூலி, லியோ, மாஸ்டர், மெர்சல், தெறி, புலி, ஜவான், இந்தியன் 2, ராயன் போன்ற பல ஹிட் படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்பை பொறுத்தவரை, சந்ததே சந்ததி தொடங்கி, இயக்குனர் சங்கரின் 'கேம் சேஞ்சர்' வரை பல படங்களை தயாரித்துள்ளார். பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, கங்கனா ரனாவத் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
நியூஸ் 18 நெட்வொர்க்கால் வழங்கப்பட்ட 'ரியல் எஸ்டேட் ஐகான் - 2025' விருது
டைம்ஸ் குரூப்பால் வழங்கப்பட்ட 'ரியல் எஸ்டேட் டைக்கூன் -2025' விருது
டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் வழங்கப்பட்ட 'தொலைநோக்கு பார்வை கொண்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர்' - 2023 விருது
டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் வழங்கப்பட்ட 'ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் அதிபர்' - 2021 விருது
தமிழக அரசால் வழங்கப்பட்ட 'தமிழ்நாட்டின் ஐகான் - 2021' விருது
டைம்ஸ் குருப்பால் வழங்கப்பட்ட 'சிறந்த ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்' - 2019
ஹீருன் ரிப்போர்டால் வழங்கப்பட்ட 'மிகவும் மதிக்கப்படும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் - 2017' விருது
தி எகனாமிக் டைம்ஸால் வழங்கப்பட்ட 'சிறந்த ரியல் எஸ்டேட் பிராண்ட்' - 2015 விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.
சொத்து மதிப்பு
ஆதித்யாராம் நிகர சொத்து மதிப்பு ரூ.17,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. பணத்தை விரைவாக பெருக்குவதில் நம்பிக்கை கொண்ட இவர், பங்குகள் மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் செய்துள்ள புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலம் இந்தியாவின் சிறந்த செல்வம் உருவாக்குபவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் மற்றும் படைப்புத் துறைகளில் உள்ள தேவையால் இவரது சொத்து மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications