"பிரதமர் ஸ்டாலின்?".. எகிறியடிக்கும் "கிங்மேக்கர்" முதல்வர்.. அச்சாரம் போட்டாச்சு போல.. என்னாச்சு?
பிரதமர் வேட்பாளர் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: முதல்வர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கூறப்படுகிறது.. இதுகுறித்த தன் கருத்துக்களையும், திமுக எம்பி ஆ.ராசா நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்தே, தன்மீதான கவனத்தை நாட்டு மக்களிடம் குவித்து வருகிறது திமுக அரசு..
இது எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து போய் கொண்டிருப்பதும், மேலிடத்தை யோசிக்க வைத்து வருகிறது.

ஆச்சரியம்
சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவிலேயே, பாஜக திரும்பி பார்க்கும் அளவுக்கு அந்த விழா வியப்பை கூட்டியது.. ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி என எத்தனையோ தலைவர்கள் ஸ்டாலினின் நூல் விழாவிற்கு வந்திருந்தனர்.. இவர்கள் அனைவரையும் மேடையில் வைத்து கொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியபேச்சு அதற்குமேல், பாஜகவுக்கு கலக்கம் தந்துவிட்டது என்றே சொல்லலாம்.

விதை விதைப்பேன்
"மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். இங்கு சட்டத்தின் ஆட்சியாக மட்டுமல்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திமுகசார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன்" என்று ஸ்டாலின் பேசிய பேச்சு பாஜக கூடாரத்தையே அசைத்து பார்த்து வருகிறது.

பெருந்தலைகள்
வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு வரும் சூழலில், ஸ்டாலினின் பேச்சு கவனத்தை அப்போதே ஈர்த்தது.. மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கி உள்ள மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற சிக்கல்கள் இனி கண்டிப்பாகவே எழவே செய்தாலும், இதில் ஸ்டாலின் பெயரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக அப்போது முணுமுணுக்கப்பட்டது. அதேபோல, ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டதாக திமுக தொண்டர்களே உளமார நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்..

புரட்சி பயணம்
ஆனால், ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை பலமுறை வெளிப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஒருமுறை முரசொலியில் இது குறித்த கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.. "ராகுல் காந்தியே வருக.. நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க" என்று கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின், ராகுலின் இந்திய பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்று திமுக நாளேடான முரசொலியில் பதிவாகி இருந்தது இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

விருப்பம்
அரசியல் களம் இவ்வாறாக இருந்தாலும், திமுக தொண்டர்களின் விருப்பம் வேறு மாதிரியாக இருக்கிறது என்றே சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக எம்பியும், மூத்த தலைவருமான ஆ.ராசா, நம்முடைய ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு சிறப்பு ஒன்றை தந்துள்ளார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.. குறிப்பாக, 2024 எம்பி தேர்தலில், திமுகவின் நகர்வு எப்படி இருக்க போகிறது? என்ற கேள்வியை முன்வைத்தோம்.. அதற்கு ஆ.ராசா நம்மிடம் சொன்ன பதில் இதுதான்:
கவின் எம்பியும், மூத்த தலைவருமான ஆ.ராசா, மிகப்பெரிய ஆளுமையாக, தவிர்க்க முடியாத தலைவராக அரசியல் களத்தில் உருவாகி உள்ளார்..

நீரோட்டம்
"திமுகவை பொறுத்தவரை, இது வெறும் கட்சி மட்டும் கிடையாது.. அறிவுப்பூர்வமான இயக்கமும்கூட.. வாசிப்பவர்களும் இங்கு அதிகம், அறிவை போதிப்பவர்களும் இங்கு அதிகம்.. அப்படிப்பட்ட அறிவுபோதிப்பில், இன்றைய இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் படிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லி கொள்கிறேன்.. திமுக என்பது தொடர் நீரோட்டம்.. இந்த நீரோட்டத்தில் நீரும் குறையாது.. அதன் தன்மையும் குறையாது.. 2024 தேர்தலானது, மோடியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய தேர்தலாகத்தான் கண்டிப்பாக இருக்கும்..

ஆசை ஆசையாய்..
யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட, மோடி பிரதமராக தொடர கூடாது என்பதில்தான் இந்திய மக்கள் தெளிவாக இருப்பார்கள்.,. அதிலும் தமிழக மக்கள், மிக மிக தெளிவாக இருப்பார்கள்.. மோடியை எதிர்க்கின்ற, பாஜகவை எதிர்க்கின்ற, மதவாதத்தை எதிர்க்கின்ற, தலைவர்கள் எல்லாரும் ஒரு அணியில் வரும்போது, அந்த அணியில் உள்ள தலைவர்களுக்கே தான் பிரதமராக வந்தால் என்ன? என்ற ஒரு ஆசை இருக்கத்தான் செய்யும்..

"பந்து" வரும்
எல்லாருக்கும் ஆசை உள்ளபோது, இதில் யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுப்பதற்காக முன்னிலைப்படுத்த வேண்டும்.. அந்த "பந்து" யார் கிட்ட வரும் என்றால், அப்படி ஒரு ஆசையே இல்லாதவர் கிட்டதான் வந்து சேரும்.. அந்த ஆசை, எங்கள் தலைவர் ஸ்டாலினிடம் இல்லை.. ஏன் என்றால், கலைஞரிடமே, இதற்கு முன்னாடி ஒரு கேள்வியை கேட்டாங்க.. ஜனாதிபதியாக வர்றீங்களா? என்று கேட்டதற்கு, "என் உயரம் எனக்கு தெரியும்" என்று சொல்லி விட்டார்.. ஆனால், இவரோ, அவங்க அப்பாவைவிட அடக்கமானவர்..

கிங்மேக்கர்
பிரதமர் வேட்பாளராக அவரை, திமுக முன்னிறுத்த வேண்டிய அவசியமே இல்லை.. 40 எம்பிக்களை கையில் வைத்துக் கொண்டு, அந்த ஆசையே இல்லாத ஒருவரை மறுதலித்துவிட்டு, எப்படி பிரதமரை மற்றவர்கள் தீர்மானிப்பீர்கள்? அதனால், எல்லாருமே இங்கேதான் வருவாங்க.. பார்த்துக்கிட்டே இருங்க.. டெல்லியை பொறுத்தவரை ஸ்டாலின்தான் 'கிங்மேக்கர்'.. நம் மாநிலத்திலோ அவர்தான் "கிங்" என்று தன் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஆ.ராசா.. ஏற்கனவே, குஷியில் இருக்கும், திமுக தரப்பினருக்கு, ஆ.ராசாவின் இந்த கருத்துக்கள், மேலும் நம்பிக்கையை கனப்படுத்தி உள்ளது..!!

கேம் ஸ்டார்ட்
இதனிடையே இன்னொரு நிகழ்வையும் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தும் வகையில், தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஸ்டாலின் என்பதை மறுக்க முடியாது.. ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பில் தீவிரமாக களமாடி வருகிறார் மம்தா.. டெல்லி வரை சென்றாலும் சோனியாவை சந்திக்காமலேயே ஊர் திரும்பிய வரலாறும் உண்டு.. காரணம், ராகுலை வேட்பாளராக முன்னிறுத்துவரை ஆரம்பத்தில் இருந்தே ரசிக்கவில்லை என்றாலும், பாஜக எதிர்ப்பு என்ற அலைவரிசையில் ஸ்டாலின் பக்கம் நின்றார்.. ஆனால், அந்த பாஜக எதிர்ப்பில் தற்போது, மம்தா சற்று தளர்ந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஸ்டாலினுடனான அவரது சந்திப்பு நேற்று முன்தினம் நடந்துள்ளது... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அரசியலே பேசவில்லை என்றும் இரு தலைவர்களும் சொல்லியபோதும், விஷயம் எங்கேயோ "இடிக்கிறதே" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!!
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications