மாமாவுக்கு நான் செய்ற பிரியாணின்னா பிடிக்கும்.. இந்த உதய் இருக்காரே.. வெடித்து சிரிக்கும் கிருத்திகா
சென்னை: "ஸ்டாலின் அங்கிளுக்கு நான் செய்யும் பிரியாணிதான் மிகவும் பிடிக்கும்" என அவரது மருமகளும் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் விஜய் ஆண்டனியை காளி படத்தில் இயக்கினார். ஆனால் அவருக்கு அந்த படம் பெரியதொரு வெற்றியை கொடுக்கவில்லை.
இதனால் கிருத்திகா வெப்சீரிஸ் பக்கம் பிஸியாக இருக்கிறார். மேலும் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இவர் ஒரு டெலிவிஷன் ஷோவில் உதயநிதியுடன் கலந்து கொண்டார்.

5 உணவுகள்
அப்போது அவர் கூறுகையில் எனக்கு வெறும் 5 உணவுகள் மட்டுமே சமைக்கத் தெரியும். அதையும் ஒரு நோட் புத்தகத்தில் எழுதி வைத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் அதை பார்த்துத்தான் சமைப்பேன். லாக்டவுன் சமயத்தில் புது விதமான உணவுகளை சமைக்க நான் கற்றுக் கொண்டேன்.

ஸ்டாலின் அங்கிள்
நான் சைவம், அசைவம் இரு உணவுகளையுமே சமைப்பேன். அதிலும் பிரியாணி நன்றாக சமைப்பேன். இதைத்தான் வீட்டில் அதிகமாக செய்வேன். ஸ்டாலின் அங்கிளுக்கு நான் செய்யும் பிரியாணிதான் ரொம்ப பிடிக்கும். ஆனால் உதயநிதி கலாய்த்துவிடுவார். "இது பேரு பிரியாணி இல்ல, புலாவ். கடையில் சாப்பிடுறதுதான் பிரியாணி" என்பார்.

ப்ரவுன் ரைஸ்
எங்கள் வீட்டில் அனைவரும் இளமையாக இருக்க காரணம் என்ன தெரியுமா. அத்தை துர்காவின் Health Conscious தான். தோசை, இட்லி போன்றவற்றில் வெள்ளை அரிசியை பயன்படுத்தாமல் ப்ரவுன் ரைஸ், ராகி தோசை, முடக்கத்தான் கீரை தோசை உள்ளிட்ட உடலுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பார். இதைத்தான் இன்றும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

உடற்பயிற்சி
இது தவிர யோகா, எக்ஸர்சைஸ் ஆகியவையும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஹெல்த்தையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருந்தால் எப்போதும் இளமையாகவே தோன்றுவோம் என்றார் கிருத்திகா உதயநிதி. அண்மையில் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பேசும் போது முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன வயதிருக்கும் என நானும் தாய் சோனியாவும் பேசினோம். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு 69 வயது என நான் சொன்னதை நம்பாமல் 50 அல்லது 60தான் இருக்கும் என என்னிடம் கூறி கூகுளில் செக் செய்துவிட்டு "ஆம் நீ சொன்னது சரிதான்" என தாய் சோனியா தெரிவித்ததாக ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications