கிருத்திகா உதயநிதி டூ ஷாலினி வரை.. சிஎஸ்கே-ஆர்சிபி போட்டியை நேரில் ரசித்த திரை பிரபலங்கள்! லிஸ்ட்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை-பெங்களூர் அணிகள் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 2024ம் ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கின. இது ஐபிஎல்லின் 17 வது சீசனாகும். கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனானது.
இதனால் இந்த சீசனின் நடப்பு சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் களம்காண்கிறது. இந்நிலையில் தான் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளசிஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். கோலி 21 ரன்களிலும், டூ பிளசிஸ் 17 ரன்களிலும் அவுட்டாகினர்.
அதன்பிறகு ரஜத் படிதார், அதிரடி ஆட்டக்காரர் ஆகியோர் டக் அவுட் ஆகினர். கிரீன் 18 ரன்னில் அவுட்டானார். இதனால் பெங்களூர் தடுமாறியது. இறுதியில் அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினர். அனுஜ் ராவத் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்த நிலையில் 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 173 ரன்கள் குவித்தது. அதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 174 இலக்கை எட்டிப்பிடித்து இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.
சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள், ரஹானே 27 ரன், டேரில் மிட்செல் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். சிவம் துபே 34 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 25 ரன்களும் எடுத்த நிலையில் சென்னை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் சென்னை - பெங்களூர் போட்டியை ஏராளமான திரைபிரபலங்கள் நேரில் ரசித்துள்ளனர்.
அதன்படி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று அவர் போட்டியை ரசித்தார். கிருத்திகா உதயநிதி காரில் இருந்து இறங்கி ஸ்டேடியத்துக்குள் செல்லும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதேபோல் நடிகர் தனுஷ் தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ராவுடன் போட்டியை ரசித்தார். காமெடி நடிகர் சதீஷ், நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, ஷாமிலி மற்றும் ரிச்சர்டு உள்ளிட்டோரும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications