பிக் பாஸ் கமல்ஹாசன் "வச்ச உள்குத்து.." வெகுண்டெழுத்த பாஜக ஆதரவாளர் கிஷோர்.. மேட்டரே இதுதான்!
சென்னை: விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜிபி முத்துவுக்கு வந்த ரசிகரின் கடிதத்தில் நீங்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்த ஒரு வார்த்தை இல்லையே என்று கமல்ஹாசன் கேட்க, அஜீம் அது சங்கியா என்று கூறிய நிலையில் அந்த வார்த்தையை கமல்ஹாசன் அவமானப்படுத்திவிட்டதாக கிஷோர் கே சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

பிக் பாஸ்
இதில் குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.

பிக் பாஸ் 6
இந்த நிலையில் பிக் பாஸ் 6 வது சீசன் கடந்த வாரம் தொடங்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்று ஓளிபரப்பான கமல்ஹாசன் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர் ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் அனுப்பிய கடிதம் படித்துக் காட்டப்பட்டது. இதனை சக போட்டியாளரும் நடிகருமான அஜீம் படித்துக் காட்டினார்.

என்ன கேள்வி?
அந்த கடிதத்தில், "தலைவரே பிக்பாஸ் வீட்டில் சிங்கியா? சொங்கியா? மங்கியா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனை கேட்ட ஜிபி முத்து வாயை பிளந்து அதிர்ச்சியோடு பார்க்க, கமல்ஹாசனோ "ஒன்னொன்றை விட்டுவிட்டார்களே! எனக்கும் அதான் தோன்றியது" என்று கூற, அமுதவான், சங்கி மங்கி என்ற சொன்னார்.

சங்கியா?
உடனே கமல்ஹாசன் ரசிகர்களை பார்த்து தலையாட்டினார். உடனே அஜீம், "சங்கி இல்லைண்ணே சொங்கியா?" என்று கூற ஜிபி முத்து மங்கி என்றார். பொதுவாக சங்பரிவார அமைப்பை சேர்ந்தவர்களை சுருக்கி சங்கி என்று அழைத்து வரும் நிலையில், அது பிக் பாஸ் வீட்டில் ஒலிக்கப்பட்டது அரசியலாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

கிஷோர் கே சுவாமி
இதுகுறித்து பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். "இது ஏதோ எதேர்ச்சையாக சொன்னது அல்ல. சங்கி என்ற வார்த்தையை கொச்சைப்படுத்த க்ரிப்டோ *** திமுகவின் அஸீம் மூலம் கேலி செய்வதாக நினைத்து பரப்பப்படும் பிரச்சாரம்." என குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications