DMK Alliance: உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டி… ஒரு இடம் ஒதுக்கீடு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பணிபுரிவோம் என்றார். 21 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications