தஞ்சாவூரில் இளைஞரை தாக்கிய போலீஸ்?.. ஆகாஷ் பதிலடி.. நடுநிலை விசாரணை கோரிய ஈ.ஆர்.ஈஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியபோது, அந்த சாலையைக் கடக்க முயன்ற இளைஞரை போலீஸ் அடித்த நிலையில், பதிலுக்கு அந்த இளைஞரும் திருப்பி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், காவல் துறை உயர் அதிகாரிகள் நடுநிலையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. இதில், விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் அக்கட்சி மாநாட்டிற்காக நிர்வாகிகள் வைத்திருந்த பேனர்களும் அகற்றப்பட்டன. இதையடுத்து, விசிகவினர் அகற்றப்பட்ட பேனர்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

kmdk-eswaran-condemns-police-and-vck-action

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கும், விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸ் அடித்த நிலையில், பதிலுக்கு அந்த இளைஞரும் திருப்பி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக கொமதேக ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாநகராட்சியில் விசிக விளம்பர பதாகைகளை அரசு தரப்பில் அகற்றியதைக் கண்டித்து, அக்கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சாலையில் ஆகாஷ் என்ற இளைஞர் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சாலை மறியலை அவர் தனது வாகனத்தில் கடக்க முயன்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசிகவினருக்கு ஆதரவாக நின்று, பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர் ஆகாஷை அடித்துத் தாக்கியுள்ளனர். தன்னுரிமையைக் காக்கப் போராடிய ஆகாஷை காவல் துறை அதிகாரி ஒருவர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதற்குக் கோபமடைந்த இளைஞர் திருப்பி அடித்துள்ளார்.

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்த விசிகவினர் மீதோ, இளைஞரைக் கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரி மீதோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. விசிகவினராலும், காவல் துறையினாலும் தாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட ஆகாஷ் மீது மட்டும் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

இதுதொடர்பான முழுமையான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் நடுநிலையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+