புரியாமல் பேசிய ஆதவ் அர்ஜுனா.. உடனே எகிறிய கே.என்.நேரு.. சிரிக்க தொடங்கிய உதயநிதி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் அனுமதிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதுதொடர்பாக சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இன்று கேள்வி நேரம் எடுத்து 5 கேள்விகளுக்கு அனுமதி அளித்தீர்கள். எம்எல்ஏ-க்கள் எழுப்பிய கேள்விகள், துணை கேள்விகளுக்கு அமைச்சர்கள் தெளிவாக பதில் அளித்திருக்கிறார்கள்.

ஒரு வேண்டுகோள் மட்டும்.. கேள்வி நேரம் நடக்கும் போது அந்த துறையின் செயலாளர்கள் அவைக்கு வந்து குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். ஆனால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார். அதற்கு நீங்களும் அனுமதி கொடுத்து கரூர் சம்பவத்தையும் ஒப்பிட்டு சொல்கிறீர்கள்.

KN Nehru

கரூர் சம்பவ விவாதத்தின் போது முதல்வர் அவையில் இருந்தார். இன்று முதல்வர் அவையில் இல்லை. தலைமைச் செயலாளரும் இல்லை. இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு துறை சார்ந்த பிரச்சனை வரும் போது, அந்த துறை அதிகாரிகள் இங்கு இருக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து பதில் அளிக்கையில், சட்டசபை நேரலையில் கொடுப்பதால், அருகில் உள்ள வார் ரூமில் தான் துறை செயலாளர்கள் இருக்கிறார்கள். முன்பு நேரலை இருக்காது என்று பதில் அளித்தார். அப்போது இடைமறித்த திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, சட்டசபை நேரலை என்பது எப்போதும் இருப்பதுதான். வெளியில் தான் கொடுக்க மாட்டோம். நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.. இதனை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உங்களின் துறை செயலாளர் இருந்தால், குறிப்பெடுத்து உடனடியாக அதனை நடத்த முடியும் என்றால் முடியும் என்பார். நடத்த முடியாது என்றால், அதனை சொல்லிவிடுவார். எனவே துறை செயலாளர் அவசியம் இருக்க வேண்டும். சட்டமன்றம் தான் அதிகாரமிக்க ஒன்று. முதல்வர் இல்லையென்றால், தலைமைச் செயலாளராவது இருக்க வேண்டும். நேபாளம் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பினால், உடனடியாக அமைச்சர் பதிலை குறிப்பெடுத்து திருத்தவும் முடியும் என்று தெரிவித்தார்.

கே.என்.நேருவின் பேச்சை கேட்டு உதயநிதி ஸ்டாலின் சிரிக்க தொடங்கிவிட்டார். இதன்பின் சபாநாயகர் விளக்கம் அளிக்கையில், இந்த அவை பெரியது, அதிகாரமிக்கது, சர்வாதிகாரம் மிக்கது. 1 ரூபாய் செலவு செய்ய வேண்டுமென்றால், அரசு இந்த அவையில் அனுமதி பெற்றாக வேண்டும். இந்த அவையில் பேசுபவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்கள். தங்கள் கருத்தை கட்சிக்கு ஏற்ப பேசுவார்கள்.

இவற்றையெல்லாம் கேட்டு எந்தெந்த இலக்காகவிற்கு டிமாண்ட் வருகிறதோ, அந்தந்த இலக்காவின் அதிகாரிகள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். இந்த அவையை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்பு பேசி இருக்கிறார். அப்போது அதனை ஏற்று சபாநாயகர் அதிகாரிகள் இருப்பிடத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதேபோல் நானும் அதிகாரிகள் இனி இருக்கைகளில் அமர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+