சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்.. மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி
சென்னை: கொடைக்கானலில் தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய ஆளுநர் ரவி "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இனி வரும் காலங்களில் டெஸ்க்கில் கல்வி கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும்" என்று கூறினார். அதுமட்டும் இன்றி சரஸ்வதி வந்தனம் பாடலை பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி












Click it and Unblock the Notifications