Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவர்கட், கொலை.. 'அந்த' பகீர் வாக்குமூலம்.. கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் இன்று ஆஜராகவில்லை.. ஏன்?

எஸ்டேட் மேனேஜர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெற்ற கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை.. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.

கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொலை நடந்தது..

கொள்ளையும் நடந்தது.. இது தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், போலீசாரிடம் நிறைய வாக்குமூலங்களை அளித்தார்..

வாக்குமூலம்

வாக்குமூலம்

அந்த ரகசிய வாக்குமூலங்களை போலீசாரும் பதிவு செய்து கொண்டுள்ளனர். அதேபோல, சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்... அவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்... இதையடுத்து கடந்த வாரம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் திடீர் திருப்பங்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடராஜன்

நடராஜன்

ஆனால், 2-ம்தேதி அதாவது இன்றைய தினம் வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும் பரபரப்புக்கும் மத்தியில் இன்று இன்று மீண்டும் விசாரணை நடந்தது.. விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர்... ஆனால், விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது... ஆனால், நடராஜன் ஆஜராகவில்லை.

சம்மன்

சம்மன்

அதற்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை... அவருக்கு போலீஸார் சம்மன் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது... இன்றைய தினம் விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தவும், அதை ஏற்று வரும் 1-ம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். எஸ்டேட் மேனேஜர் நடராஜன், இன்றைய தினம் விசாரணை நடத்தப்படும் என்று ஏற்கனவே நீதிபதி தெரிவித்திருந்தார்..

விசாரணை

விசாரணை

ஆனால், நடராஜன் இன்றைய தினம் வரவில்லை.. ஒருவேளை இனி சம்மன் அனுப்பப்பட்டு, அதன்பிறகு நடராஜனிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.. அதுபோலவே, தடயவியல் நிபுணர் ராஜ்மோகனிடம் நாளையும், மின்வாரிய உதவி பொறியாளரிடமும் நாளை மறுநாளும் விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாட்சியம்

சாட்சியம்

இந்த வழக்கை பொறுத்தவரை, கிருஷ்ணபகதூர், சயான் மற்றும் நடராஜனின் வாக்குமூலம்தான் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.. ஏற்கனவே நடராஜனிடம் போலீசார், தங்கள் விசாரணையை நடத்தியிருந்தனர்.. எஸ்டேட்டில் எப்போதுமே பவர்கட் ஆகாத நிலையில், அன்றைய தினம் மட்டும் எப்படி பவர் கட் ஏற்பட்டது? என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நடராஜன் வாக்குமூலம் தந்திருந்தார்.

நிர்வாகம்

நிர்வாகம்

காரணம், கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அனைத்து அதிகாரத்துடன் அவரே இயங்கி வந்தார்.. சசிகலா சிறையில் இருந்தபோதும் நடராஜனிடம்தான் எஸ்டேட் பொறுப்பில் இருந்தது.. தஞ்சை பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.. சசிகலா குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நெருக்கமானவர் என்பதாலும், அவரது பரிந்துரையாலும்தான், கொடநாடு எஸ்டேட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்..

எஸ்டேட்

எஸ்டேட்

ஆரம்ப கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் நிர்வாகத்தை இவர்தான் கவனித்து வந்தார்.. அதற்கு பிறகுதான், சசிகலா பரிந்துரையின் பேரில் கொடநாடு எஸ்டேட்டுக்கு மேனேஜர் பொறுப்புக்கு வந்தார்.. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால்தான் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+