கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.. தவெக விஎஸ் பாபு வெற்றி
சென்னை: சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் சுற்றில் ஆரம்பித்து தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார். இந்நிலையில் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார். இங்கு தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 2011ம் ஆண்டு உருவான தொகுதியாகும். இங்கு உருவானது முதலே ஸ்டாலின் தான் வென்று வருகிறார். இதுவரை நடந்த 3 தேர்தல்களிலும் ஸ்டாலின் தான் ஜெயித்தார். 2011ம் ஆண்டு முதல் கொளத்தூரில் நடந்த முதல் தேர்தலில் அதிமுகவின் சைதை துரைசாமியை 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்கடித்தார்.

2016ம் ஆண்டு அதிமுகவின் ஜே.சி.டி பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்டு, சுமார் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2021: கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமைக் காட்டிலும் சுமார் 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, தனது செல்வாக்கை நிரூபித்தார்.
2026ம் ஆண்டான தற்போதைய தேர்தலை பொறுத்தவரை பலமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்காவது முறையாகக் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பி. சந்தானகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் வி.எஸ். பாபு களம் இறங்கியுள்ளது இத்தொகுதியின் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்தர பாண்டியன் லூதர் சேத் நிறுத்தப்பட்டார்.
இந்த முறை தேர்தல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், கொளத்தூரில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் விவாதப் பொருளாகி இருந்தது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் தவெக பக்கம் திரும்புமா அல்லது ஸ்டாலினுக்கே விழுகுமா என்ற கேள்விகள் உள்ளன. இந்த வாக்குகள் திமுகவின் வாக்கு வங்கியில் கை வைக்குமா அல்லது எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா என்ற கேள்விகள் இருந்தது.
ஏனெனில் கொளத்தூரில் 2026 தேர்தலில் அது 86.11% ஆக உயர்ந்து இருந்தது. சுமார் 24% க்கும் அதிகமான உயர்வு என்பது அந்தத் தொகுதியின் தேர்தல் வரலாற்றிலேயே மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது இன்று காலை தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றில் தொடங்கி , 18 சுற்றுகள் கடந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார்.
கடைசி சுற்றுக்குமுந்தைய சுற்றின் படி, தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 69 ஆயிரத்து 419 வாக்குகள் பெற்றார். முதல்வர் ஸ்டாலின் 60 ஆயிரத்து 688 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் 15 ஆயிரத்து 382 வாக்குகள் பெற்றிருந்தார். இறுதி சுற்றின் முடிவில் தவெக விஎஸ் பாபு 80407 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் 72321 வாக்குகள் பெற்றார். 8,086 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி விஎஸ் பாபு வெற்றி பெற்றுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications