நடந்தது நடந்ததுதான்.. கொளத்தூரில் தோற்ற ஸ்டாலின்! EVMல் எந்த பிரச்சினையும் இல்ல.. சமீரன் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராகட்சி ஆணையருமான சமீரன் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் புகார்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன எனவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் அந்த தொகுதியில் உள்ள 14 வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது.

இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்த நிலையில், வாக்குகள் சரிபார்ப்பு பணியும், பின்னர் மாதிரி வாக்கு பதிவும் நடைபெறு வருகிறது. ஒருவேளை வாக்குகள் மாறுபட்டதாகவோ அல்லது வாக்குப்பதிவு முறையாக செயல்படவில்லை என ஸ்டாலின் நிரூபித்தால் அங்கு மறு தேர்தலுக்கும் வாய்ப்பிருந்தது.

Kolathur EVM DMK MK Stalin

கொளத்தூர் தொகுதி

கடந்த மூன்று நாட்களாக சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இரண்டு மின்னணு இயந்திரங்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அது சரியாக வேலை செய்யவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கொளத்தூரில் 36 வேட்பாளர்கள் நின்ற நிலையில் 157 ஆவது பூத்தில் ஒரு கண்ட்ரோல் யூனிட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 பேலட் யூனிட்டுகள் ஆய்வு செய்யப்பட்டது. சில யூனிட்டுகளில் அட்ரஸ் டேக் புதிதாக இருந்தது எனவும் சில இடங்களில் அரக்குசீல் வைக்கப்படவில்லை என திமுக குற்றம் சாட்டி உள்ளது.

சமீரன்

இந்த நிலையில் கொளத்தூர் வாக்குப்பதிவில் எந்தவித முறைகேடுகளும் இல்லை எனவும், திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணையருமான சமீரன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரம்

தற்போது அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்த்தல் பணி 29.07.2026 முதல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகளும் சரிபார்க்கப்பட்டன. வாக்கு இயந்திரங்களில் சிலிப்பில் எழுதப்பட்டிருந்தது சரியாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டது. வாக்கு இயந்திரத்தை திறந்து பார்த்து அதன் எண்ணை சரி பார்த்துக் கொள்ளலாம்.

விவிபேட்

கொளத்தூர் சென்னை மாநகராட்சி பள்ளியில் பதிவான வாக்குகளில் 412 வாக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு பதிவான வாக்குகளுக்கு விவிபேட் இயந்திரத்தில் லைட் எரியவில்லை. டெக்னிக்கல் பழுது ஏற்பட்டுள்ளது. தி.மு.க-வின் புகார்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டது.

ஆதரம் இல்லை

இ.வி.எம் மெஷின், வி.வி.பேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரமும் இல்லை" என விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+