ஸ்டாலின் மட்டுமில்ல.. கலைஞரே நின்னு இருந்தாலும் ஜெயிச்சுருப்பேன்! கொளத்தூரில் கொந்தளித்த விஎஸ் பாபு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வர் யார் என்றால் அது விஜய் தான்.மற்ற கட்சிக்காரர்கள் நாங்கள் சொன்னதை செய்வோம் என்று தான் சொல்வார்கள். ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்கள் சொல்லாத எல்லாவற்றையும் செய்வார் என கூறியுள்ளார் கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு. மேலும், கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் மட்டுமல்ல அவருடைய தந்தையே போட்டியிட்டு இருந்தாலும் நான் அவரை தோற்கடித்திருப்பேன் எனவும் பேசியுள்ளார்.

சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக வெற்றிக் கழகம் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Kolathur MLA VS Babu

இந்நிகழ்ச்சியில் இதில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு, பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஎஸ் பாபு

நிகழ்வில் ஆயிரம் பொது மக்களுக்கு அரிசி மூட்டை, 250 குக்கர், 20 தையல் இயந்திரம், 50 கேஸ் அடுப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு பேசும் போது,"இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வர் யார் என்றால் அது விஜய் தான்.மற்ற கட்சிக்காரர்கள் நாங்கள் சொன்னதை செய்வோம் என்று தான் சொல்வார்கள்.ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்கள் சொல்லாத எல்லாவற்றையும் செய்வார்.

ஸ்டாலின்

மரிய வில்சன் நிதி பற்றி எதுவும் தெரியாது என்று நாங்க நினைத்தோம். ஆனால் சட்ட மன்றத்தில் சிறப்பாக பேசினார். கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் மட்டுமல்ல. அவருடைய தந்தையும் போட்டியிட்டு இருந்தாலும் நான் அவரை தோற்கடித்திருப்பேன். தமிழ்நாட்டில் வேற யாரும் வெற்றி பெற முடியாது தமிழக வெற்றிக் கழக விஜய் அவர்கள் தான் முதலமைச்சர் ஆக இருப்பார்.

திமுக

திமுக கட்சி சார்ந்தவர்கள் இதன்பிறகு அமைச்சராகவோ சட்டமன்ற உறுப்பினராக ஆக முடியாது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குறிப்பாக லஞ்சம் இல்லாமல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 25 ஆண்டு காலம் வரை முதலமைச்சராக விஜய் இருப்பார். நாங்கள் மறைந்த பிறகு 100 ஆண்டுகளும் முதலமைச்சராக தமிழ்நாட்டில் இருப்பார்.

லயோலா மணி

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி," நீங்கள் இல்லை என்றால் இந்த ஆட்சி இல்லை இந்த ஆட்சி அமைப்பதற்கு மக்கள் ஆகிய நீங்க தான் முக்கியமான காரணம். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் இன்றைக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருக்கிறேன் என்றால் அதற்கு முதலமைச்சர் விஜய் தான் காரணம் அவருக்கு மிக்க நன்றி. தமிழகம் வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் ஆகி இருக்கிறார், என்றால் அதற்கு முக்கிய காரணம் மக்கள் ஆகிய நீங்கள் தான்.

புரட்சிகரமான அரசியல்

சிவப்பு எப்படி புரட்சியை சொல்கிறதோ? அதேபோன்று புரட்சிகரமான அரசியல் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எங்களைப் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிரித்தவர்களுக்கு, விஜய் அவர்கள் சொன்னது,என்னுடைய செயலில் நான் சொல்கிறேன் என்று சொன்னார். அதை செய்து காட்டினார். இன்றைக்கு மற்ற கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுத்தவர் தான் முதலமைச்சர் விஜய் அவர்கள். இன்னும் பத்தாண்டுகளுக்கு நிரந்தர முதலமைச்சர் ஆக விஜய் அவர்கள் தான் இருப்பார்.

முதலமைச்சர் விஜய்

இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது , 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய இடத்தில் இருப்பார். முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் ஆள கூடியவர் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவை ஆளக்கூடியவர் தான் முதலமைச்சர் விஜய். 100 நாள் சாதனை மட்டும் இல்லை, இன்னும் பல சாதனைகளை செய்து கொண்டு இருப்பார் முதலைச்சர் விஜய் என குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+