காப்பாத்துங்க.. அதிகாலை 1.30 மணிக்கு கதறிய காதலி! வீட்டுக்குள் என்ன நடந்தது? கொல்கத்தாவில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: காதலி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார்.. இதையடுத்து அங்கு சென்றவர்கள் வீட்டுக்குள் பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. கொல்கத்தாவில் அதிகாலை 1.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!

கொல்கத்தாவின் காரியா பகுதியில் உள்ளது பர்தாபாத் என்ற இடம்.. இங்கு வாடகை வீட்டில் வசித்து வருபவர் சர்தக் சர்கார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தைச் சேர்ந்தவர்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.. மேலும், சஞ்சலிகா பாசு என்ற பெண்ணுடனும் லிவ்-இன் உறவில் இருந்து வந்தார். சஞ்சலிகாவின் அம்மா மௌமிதாவும் இவர்களுடன் அதே வீட்டில் தங்கியிருந்தாராம்.

kolkatta man

காளி பூஜைக்காக பட்டாசு

கடந்த சனிக்கிழமை,சர்தக் சர்காரும், சஞ்சலிகா பாசுவும் காளி பூஜைக்காக பட்டாசுகள் வாங்க கடைக்கு சென்றிருக்கிறார்கள்.. அப்போது அங்குள்ள கடையில் இறைச்சியையும் வாங்கிக்கொண்டு மாலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.. இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.. ஆனால் இரவில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. தனிப்பட்ட விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய இந்த வாக்குவாதம் பிறகு சண்டையாக முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சஞ்சலிகா, கத்தியை எடுத்து, சர்தக் சர்காரின் தோள்பட்டையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

நள்ளிரவில் கதறிய பெண்

இதற்கு பிறகு அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சஞ்சலிகா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அழுதுகொண்டே அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார்.. இதையடுத்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனே வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கே படுக்கையில் சர்தக் சர்கார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதேநேரத்தில் உதவி கேட்ட சஞ்சலிகாவின் கழுத்திலும் பல கீறல்கள் இருந்துள்ளன.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் சர்தக் சர்காரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்மா கைது

இந்தச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் வசிக்கும் சயான் பால் சொல்லும்போது, "வீட்டுக்குள் நடந்த தகராறின்போது அதிக சத்தம் எங்களுக்கு கேட்டது.. சிறிது நேரத்தில் ஒரு பெண், அழுது உதவி கேட்டார்.. அப்போதும் நாங்கள் விழித்திருந்தோம். அதற்கு பிறகு அந்த வீட்டுக்கு சென்றோம். அங்கு படுக்கையில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். எங்களிடம் உதவி கேட்ட பெண்ணின் கழுத்தில் பல கீறல்கள் இருந்தன. உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தோம்" என்றார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சலிகா பாசுவைக் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் அவரது அம்மா மௌமிதாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்தபோது மௌமிதா வீட்டில் இருந்தாரா? மகளுடன் சேர்ந்து அவரும் தாக்குதலில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதாவது வகையில் இந்தச் சம்பவத்துக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைவிட முக்கியமாக, இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது, அது எப்படி கொலையில் முடிந்தது என்பது குறித்தும் விசாரணை விரிவடைந்துள்ளது.. இந்தக் கொலையில் அம்மாவின் ரோல் என்ன என்பதும் மொத்த விசாரணைக்கு பிறகே தெரியவரும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+