சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது ஜெயலலிதா பெயரே கிடையாதுங்க.. சர்கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    அது ஜெயலலிதா பெயரே கிடையாது, - டிடிவி தினகரன்

    சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.

    ஆனால், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

    Komalavalli is not Jayalalithas original name, says TTV Dhinakaran

    [ஆஹா.. சர்கார் வில்லி கேரக்டரோட பெயரைக் கவனிச்சீங்களா.. கிளம்பும் அடுத்த சர்ச்சை! ]

    தினகரன் கூறியதாவது: சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியுள்ளார்கள் என்று எனக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர்.

    ஆனால், ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், "ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்" என்று கேட்டார்.

    "நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள்" என்று என்னிடம் கேட்டார்.

    அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    English summary
    TTV Dhinakaran says Komalavalli is not Jayalalitha's original name which is given to a negative charector in Sarkar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X