கவுண்டர் பையனைதான் கல்யாணம் பண்ணுவோம்.. உறுதிமொழியெடுத்த பெண்கள்.. வன்னியரசு அதிர்ச்சி
சென்னை: "சாதியக்கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புறாங்க" என்று கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலுவின் வீடியோ ஒன்றை, விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக உடன் கூட்டணியில் இருக்கும்.. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சாதிய கொடுமை, தலித்துக்ளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சாதியத்தை முன்வைத்து நடக்கும் ஆவண கொலைகள், சாதிய ரீதியான அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையானஎதிர்ப்பினை திருமாவளவன் பதிவு செய்து வருகிறார்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது திருமாவளவளின் சாதி ரீதியான கொடுமைகளுக்கு எதிரான அணுகுமுறையும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகான அணுகுமுறையும் மாறி உள்ளதாக நீண்ட நாட்களாக பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவனின் அரசியலை இன்று வரை பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சித்தே வருகிறார்கள்.
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த திருமாவளவன், சாதிய வன்கொடுமைகள் ஆட்சியைப் பொறுத்து நடப்பது இல்லை என்று பதில் அளித்தார். திமுக அரசு சாதி பேதங்களுக்கு ஆதரவானது கிடையாது என்று ஆதரவு தெரிவித்த திருமாளவன்,, சமூக யதார்த்தத்தில் இன்னும் இது போன்ற நிலை தொடர்வதாக வேதனை தெரிவித்தார்.. சாதிய கொடுமைகளை தீவிரமான நடவடிக்கைகள் மூலமாகக் கட்டுபடுத்த முடியும் என்றும் விசாரணை என்கிற பெயரில் எங்காவது குற்றவாளியைக் கைது செய்வதில் காலதாமதம் செய்யப்பட்டால், உடனடியாக அமைச்சரின் கவனத்துக்கும், முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறோம் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றும் கூறினர்..
இதனிடையே சாதியத்தை ஊக்குவிக்கும் சம்பவங்கள் நடந்தால், விசிக தொடர்ந்து கடுமையாக குரல் எழுப்பி வருகிறது. விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வீவிசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலுவின் வீடியோ இருக்கிறார்..
சாதியக்கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புகிறார்கள்.
— வன்னி அரசு (@VanniKural) November 13, 2023
(கவுண்டர் பையனையே கல்யாணம் கட்டணுமுன்னு சொன்னதும் வெட்கப்பட்டு தலை குணியும் பெண்களை பாருங்கள்) pic.twitter.com/w5UMbOgMAr
அந்த வீடியோவில் கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலு சொல்ல சொல்ல பெண்கள் உறுதி மொழி ஏற்கிறார்கள். கல்ணாயம் பண்ணிக்கிறோம்.. கவுண்டர் வீட்டு பையனையே.. இது போதும், இது போதுமே ..எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அம்மா, சத்தியமே சத்தியமே சின்னமலை சத்தியமே" இவ்வாறு அந்த வீடியோ உள்ளது. கொங்கு கவுண்டர் வீட்டு பெண்கள், கவுண்டர் வீட்டு பையன்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேகேசி பாலு உறுதி மொழி ஏற்க வைத்த வீடியோ, சாதியத்தை ஊக்குவிப்பதாக விசிக குற்றம்சாட்டி உள்ளது..
விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட பதிவில் "சாதியக்கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புகிறார்கள்.(கவுண்டர் பையனையே கல்யாணம் கட்டணுமுன்னு சொன்னதும் வெட்கப்பட்டு தலை குணியும் பெண்களை பாருங்கள்)" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகி உள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications