Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3வது அலை வந்துருமோ.. "இந்த" மாவட்டத்துக்குதான் நிறைய சான்ஸ்.. பயங்கர அலர்ட்டில் "கொங்கு"..!

கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் 3வது அலையை கட்டுப்படுத்த, இப்போதே கொங்கு மண்டலம் தயாராகிவிட்டது.. அதற்கான முன்னெடுப்புகளிலும் மும்முரமாக இறங்கி வருகிறது..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பிடியில் கொங்கு மண்டலம் சிக்கி கொண்டது.. வழக்கமாக சென்னைதான் வைரஸ் பாதிப்பில் முன்னிலையில் இருக்கும்.. ஆனால், இந்த முறை சென்னையை கோவை முந்திவிட்டது..

"கோவையை காப்பாற்றுங்கள்" என்று வானதி சீனிவாசன் டெல்லி வரை பிரச்சனையை கொண்டு போனார்.. இதற்கு பிறகுதான், முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு 2 முறை சென்று நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்..

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

சுகாதார துறையும் வீரியத்துடன் முழு மூச்சாக செயல்பட்டது.. மக்களும் அரசின் விதிகளை ஏற்று நடந்தனர்.. இதையடுத்து தொற்று கொங்கு மண்டலத்தில் மெல்ல மெல்ல குறைந்தது.. எத்தனையோ முறை, லாக்டவுன்களில் தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தாலும், கொங்குவின் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளை அமல்படுத்தவில்லை.. அது தற்போது நல்ல பலனை தந்து வருகிறது.. தொற்று பாதிப்பு ஒருபக்கம் குறைந்து வந்தாலும் தடுப்பூசிகளை செலுத்தும் பணியும் விறுவிறுவென நடந்து வருகிறது.

 பாதிப்பு எண்ணிக்கை

பாதிப்பு எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் குறைந்தது ஒருநாளைக்கு 200 கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.. ஆனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துவிட்டது.. அதேபோல, கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் டிஸ்சார்ஜ் ஆகி சென்று வருகின்றனர்.. மாவட்டத்தில் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

 தடுப்பூசி

தடுப்பூசி

எனினும் 3வது அலை பரவல் கோவையை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.. ஏனெனில், கோவையில் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி வெறும் 43 சதவீதமாக உள்ளதால், 3-வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், தொற்று பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவத்துறையினர் மட்டுமல்ல, மக்களும் தயாராக இருக்க வேண்டும், அதுவும் அடுத்த ஒரு மாதத்துக்குள் 3-வது அலை வர வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் அலர்ட் செய்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டை பொறுத்தவரை கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மறுபடியும் ஆரம்பமாகி உள்ளது.. காரணம், ஈரோடு மாவட்டத்தில்தான், 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது... உயிரிழப்புகூட இந்த மாவட்டத்தில்தான் அதிகம்... அதனால் மக்கள் அச்சத்திலேயே இருந்தனர்.. அதிலும் அந்த நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது..

 சளி, காய்ச்சல்

சளி, காய்ச்சல்

இப்போது, மாநகராட்சி சார்பில் 300 அதிகாரிகள், 1,200 தன்னார்வலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவு உள்ளதா என ஆய்வு நடத்தி, கொரோனா டெஸ்ட் செய்து வருகிறார்கள். அதேபோல, நீலகிரியை பொறுத்தவரை தொற்று பாதிப்பு குறைந்தே காணப்படுகிறது.. ஆனால், இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவதால், தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது..

 கர்நாடகா

கர்நாடகா

அதேசமயம், ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா என்ற 3 மாவட்டத்திற்கு நடுவில் இந்த மலை மாவட்டம் உள்ளதால், அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டி உள்ளது.. எந்த மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு யார் வந்தாலும் சரி, அவர்கள் 2 டோஸ் செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா நெகட்டிவ் சர்ட்டிபிகேட் இருக்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யா கறாராக உத்தரவு போட்டுள்ளார்.. ஆக மொத்தம், 3வது அலை பரவிவிடாதவாறு, தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளது "கொங்கு"..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+