"ஆபாசம்".. அண்ணாமலையை திட்டி தீர்த்த ரமேஷ்.. லைவ் வீடியோ வேற.. போலீசுக்கு ஓடிய பாஜகவினர்.. என்னாச்சு

அண்ணாமலையை திட்டி வீடியோ வெளியிட்ட நபர் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வீடியோ போட்டு திட்டி தீர்த்துள்ளார் ஒருவர்.. இதை பார்த்து கொந்தளித்து போன பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினம் தினம், ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு கொண்டு, இன்னமும் ஆவேசம் அடங்காமல் உள்ளார் காயத்ரி ரகுராம்.. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு விமர்சனங்களையும் அண்ணாமலை மீது வைத்து வருகிறார்.

அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அவர் வெளியே வந்து என்னை எதிர்கொள்வாரா? உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும் என்று கதறி கேட்டுக் கொண்டே இருக்கிறார் காயத்ரி,

 ஆதாரம் எங்கே

ஆதாரம் எங்கே

மற்றொருபக்கம், அண்ணாமலையால் கட்சிக்குள் நிறைய குழப்பங்கள், சர்ச்சைகள் நிலவுகிறது, அவரை நீக்க வேண்டும் என்று பாஜக தலைமைக்கு சொந்த கட்சியில் இருந்தே அழுத்தங்களும், புகார்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவில் திமுக அரசு மீது, நாள்தவறாமல் புகார்களை அண்ணாமலை அண்ணாமலை சொல்லி வருவதால், திமுக கடுப்பாகி உள்ளது.. அந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? இதுவரை ஒரு குற்றச்சாட்டையாவது அண்ணாமலை நிரூபித்திருக்கிறாரா என்று திமுக தரப்பில் கேள்விகள் எழுகின்றன..

கதகதப்பு

கதகதப்பு

இப்படி நாலாபுறமும் பாஜக குறித்த ஹாட் செய்திகள் வட்டமடிக்கும் நிலையில், ஏதாவது பேட்டிகளை தந்து, அதற்கு மேல் களத்தை சூடாக்கிவிடுகிறார் அண்ணாமலை.. அந்தவகையில் நேற்று முன்தினம் நடந்த பேட்டியின் கதகதப்பு இன்னமும் குறையாமல் உள்ளது... நீங்கள் எந்த சேனல்? உங்கள் பெயர் என்ன? என்று கேட்டு செய்தியாளர்களை திணறடித்தார்.. அப்போது பேசிய அண்ணாமலை, "நஷ்டத்தில் இயங்கக் கூடிய பிஜிஆர் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான மொத்த ஆதாரமும் என்கிட்ட இருக்கு.. அதை முடிந்தால் உங்க சேனலில் டெலிகாஸ்ட் பண்ணுவீங்களா? என்று செய்தியாளர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினார்...

 ம்ஹூம் முடியாது

ம்ஹூம் முடியாது

அதற்கு அந்த செய்தியாளர், "ஆதாரங்களை அளித்து நேரலையில் வந்து எங்களுடன் விவாதிக்க தயாரா?" என்று கேட்டார். உடனே அண்ணாமலை, "அதற்கெல்லாம் நான் வர முடியாது... எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வருவார்" என்றார்.. இன்னொரு டிவி சேனல் செய்தியாளர், "நீங்கள் மக்கள் முன்பு இப்போதே ஆதாரத்தை வெளியிடுங்கள்" என்று கேட்கவும், கட்சி நடத்தும் சேனலுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. நீங்க போய் உங்கள் தலைவரை பற்றி செய்தி போட்டு, நல்ல பேர் வாங்கிக்குங்க.. உங்களுக்கு இஷ்மிருந்தால், செய்தியாளர் சந்திப்பை எடுத்து போடுங்கள்... இல்லாட்டி தாராளமாக போய்டுங்க.. நான் உங்கள் காலில் விழுந்தெல்லாம் கேட்கவில்லை என்றார் அண்ணாமலை..

 பூரா ஆபாசம்

பூரா ஆபாசம்

இப்படி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, அன்றைய தினமே கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து மலையேறினார் அண்ணாமலை.. ஆனாலும் அண்ணாமலை பேசியதன் தாக்கமும், சலசலப்பும், அதுகுறித்த விவாதமும் சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே உள்ளன.. அண்ணாமலை பத்திரிகையாளரிடம் வாய் தகராறில் ஈடுபடும் காட்சிகளும் வைரலானது.. இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலையை திட்டி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்..

 புதன்கிழமை நைட்

புதன்கிழமை நைட்

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர், ஆபாச வார்தைகளால் பேசி தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாச வார்தைகளால் பேசி இந்த பதிவை போட்டுள்ளாராம்.. புதன்கிழமை இரவு இதை ரமேஷ் பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்து கொந்தளித்து போன பாஜகவினர், போலீசுக்கே போய்விட்டனர்..

விடமாட்டோம்

விடமாட்டோம்

பாஜக மண்டல பொறுப்பாளர் முகுந்தன் என்பவர் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து போத்தனூர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்... இந்த புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி, உத்தமராமசாமி, வசந்தராஜன் உள்ளிட்டோரும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளனர்.. இல்லாவிட்டால் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் சார்பில் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது... இந்த புகார்களின் அடிப்படையில் ஆபாச வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+