சேகர் பாபுவிற்கு குடை பிடித்த மேயர் பிரியா? பாய்ந்து வந்த கோவை சத்யன்.. ஆஹா! உண்மையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் சேகர் பாபுவிற்கு சென்னை மேயர் பிரியா குடை பிடித்தாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவைக்கு சத்தியன் புகார் வைத்துள்ளார்.

சென்னை மாநகர மேயர் பிரியா தற்போது மழை நீர் கால்வாய் அமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் மழை காரணமாக வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக சென்னையில் பல்வேறு சாலைகளிலும் குழி தோண்டப்பட்டு உள்ளது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர்.

சாலைகள்

சாலைகள்

பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகின்றன., இன்னும் பல ஏரியாக்களில் பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் சென்னையில் முடிந்து உள்ளன. பருவமழை தீவிரம் அடையும் முன் இந்த பணிகளை முடிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை மழை

சென்னை மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்னையில் நேற்று மழை நீர் கால்வாய் பணிகளை மேயர் பிரியா பார்வையிட்டார். பணிகள் முடிந்து உள்ளனவா என்று நேரில் பார்வையிட்டார்.

ஆலோசனை

ஆலோசனை

அதன்பின் அவர் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இதன்பின் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா வெளியே வந்த போது மழை பெய்தது. இதற்காக மேயர் பிரியா குடை பிடித்தப்படி நின்று கொண்டு இருந்தார். இந்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்து அமைச்சர் சேகர் பாபுவிற்கு சென்னை மேயர் பிரியா குடை பிடித்தாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவைக்கு சத்தியன் புகார் வைத்துள்ளார்.

உண்மையா?

உண்மையா?

அதாவது மேயர் பிரியா அமைச்சர் சேகர் பாபுவிற்கு குடை பிடித்துக்கொண்டு நின்றார் என்று விமர்சனம் வைத்துள்ளார். இன்னும் சில அதிமுகவினர் இதே புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். மேயர் பிரியா அவமதிக்கப்பட்டதாக அதிமுகவினர் விமர்சனம் வைத்து வருகின்றனர். ஆனால் திமுக தரப்பினரோ.. அப்படி எல்லாமே இல்லை. அங்கு குடைகள் குறைவாக இருந்தன. அதில் மேயர் பிரியா ஒரு குடையின் கீழ் நின்று கொண்டு இருந்தார். அமைச்சர் வந்ததால், அவரும் அதே குடைக்கு கீழ் நின்றார். வேறு ஒன்றும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

அதோடு வெறும் போட்டோவை மட்டுமே பகிர்ந்து வருகிறார்கள். முழு வீடியோவில் சேகர் பாபு, மேயர் பிரியாவின் குடையை வாங்கி பிடிப்பார். இரண்டு பேருமே சேர்ந்துதான் குடையை பிடித்து இருந்தனர். முதல் ஷாட்டை மட்டும் புகைபடமாக எடுத்து அதிமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+