சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி.. எப்ப வேணாலும் ரிலீஸ்!.. பயமுறுத்தும் ஓபிஎஸ் தரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அவற்றை வெளியிடுவோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை யார் என்பதற்கான மோதல் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே சூடு பிடித்துள்ளது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தின் வாசற்படியை மாறி மாறி மிதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வங்கி கணக்கை இயக்கும் உரிமை, அதிமுக அலுவலக சாவி இருப்பு உரிமை ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்ற போதிலும் ஓபிஎஸ் விடாமல் போராடி வருகிறார்.

மதுரையையும் கொஞ்சம் பாருங்க.. எடப்பாடி எடுத்த ஆக்‌ஷன் அப்படியே நின்னுடுச்சு.. ஆர்பி உதயகுமார் பரபர! மதுரையையும் கொஞ்சம் பாருங்க.. எடப்பாடி எடுத்த ஆக்‌ஷன் அப்படியே நின்னுடுச்சு.. ஆர்பி உதயகுமார் பரபர!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீக்கிவிட்டு அந்த பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை அமர வைத்தனர். அவர் தற்போது தேவர் குரு பூஜை விழாவுக்கான தங்க கவசத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதே வேளையில் ஓபிஎஸ் தரப்பும் அந்த தங்க கவசத்தை தேவர் குரு பூஜைக்காக கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

கடந்த சில மாதங்களாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணி ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்து இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார் ஜேசிடி பிரபாகர். நாமக்கல் மாவட்டத்தில் 3 மாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்ததால் தங்கமணி ஒரு வித அச்சத்தில் இருக்கிறார் என்றார்.

கோவை செல்வராஜ்

கோவை செல்வராஜ்

இவரை தொடர்ந்து கோவை செல்வராஜ் பேசுகையில் அதிமுக முன்னள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்கவே திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருகிறார்கள். யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்து தகவல்கள் எங்களிடம் இருக்கிறது. விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

6 மாதம்

6 மாதம்

தமிழக அரசு நியாயமாக செயல்படுகிறது என்றால் கொடநாடு கொலை வழக்கை 6 மாத காலத்திற்குள் விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் அது எடப்பாடி பழனிசாமி ஆதரவாக திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுவது என்பது உறுதியாகிவிடும் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
OPS Supporter Kovai Selvaraj says that AIADMK's corruption list ready, will be released soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X