எடப்பாடிக்கு புதிய சிக்கல்... எத்தனை பிரச்சனையதான் சமாளிக்கிறது? தலைமைச் செயலருக்கு பறந்த கடிதம்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்ட அனுமதி வழங்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் புகாரளித்துள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்.

18 பேர் நீக்கம்
இந்த நிலையில் இன்று மேலும் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மருது அழகுராஜ், வினுபாலன், அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளன.

கோவை செல்வராஜ்
இந்த நிலையில் அதிமுக கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட கோவை செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், "வரும் ஜூலை 17 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
Recommended Video

கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டிய பங்களாவில் அதிமுக கட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவில் அதிமுக அலுவலகத்தை நடத்தி வருகிறார். அங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கக்கூடாது." என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications