கோயம்பேடு மார்க்கெட்டில் சரிந்த சின்ன வெங்காயம்.. சென்னை மக்கள் மகிழ்ச்சி.. ஆனால் விவசாயிகள்?
சென்னை: கோயம்பேட்டில் சரிந்த காய்கறி விலை தரைமட்டத்திற்கு சென்றுவிட்ட நிலையில், சின்ன வெங்காயம் அதற்கு மேல் விலை குறைந்துள்ளது.. ஒருபுறம் இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும், விவசாயிகள் கண்ணீர் வடிக்க துவங்கியிருக்கிறார்கள்.. இந்த சரிவுக்கு என்ன காரணம்?
தமிழகத்தின் சமையலறைகளில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

வழக்கமாக பருவமழைக் காலங்களில் உச்சம் தொடும் காய்கறி விலைகள், தற்போது கோடை வரத்தின் காரணமாகப் போட்டி போட்டுக்கொண்டு சரிந்து வருவது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியையும், விவசாயிகளுக்குப் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளியும் குவிந்து வருகின்றன. இதனால், சிறிய அளவிலான தக்காளி 6 முதல் 8 கிலோ வரை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த ரக தக்காளி கிலோ 25 ரூபாய்க்கும், முதல் ரகத் தரம் கொண்ட தக்காளி கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், பெரிய வெங்காயம் தரத்தைப் பொறுத்து கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயம் விலை
பெரிய வெங்காயம் கிலோ 26 முதல் 33 ரூபாய்க்கும், தக்காளி கிலோ 18 முதல் 23 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அன்றாடத் தேவைக்கான உருளைக்கிழங்கு 23 ரூபாய், முட்டைக்கோஸ் 26 ரூபாய், பூசணி 26 ரூபாய் மற்றும் கேரட் 29 முதல் 36 ரூபாய்க்கும் கிடைக்கிறது. பச்சை மிளகாய் 71 ரூபாய், பீட்ரூட் 30 முதல் 38 ரூபாய், நெல்லிக்காய் 120 ரூபாய், குடைமிளகாய் 62 முதல் 78 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகற்காய் 41 முதல் 51 ரூபாய், சுரைக்காய் 31 முதல் 39 ரூபாய், பட்டர் பீன்ஸ் 46 முதல் 57 ரூபாய், அவரைக்காய் 38 முதல் 48 ரூபாய், காலிஃபிளவர் 48 ரூபாய் மற்றும் வெள்ளரிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காய் மற்றும் மாங்காய் தலா 60 முதல் 75 ரூபாய் வரையிலும், கத்திரிக்காய், பீர்க்கங்காய் ஆகியவை 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இஞ்சி 91 முதல் 114 ரூபாய், சேனைக்கிழங்கு 44 முதல் 56 ரூபாய், பீன்ஸ் 42 முதல் 53 ரூபாய், வெண்டைக்காய் 45 ரூபாய், முள்ளங்கி மற்றும் புடலங்காய் 35 முதல் 44 ரூபாய், கோவைக்காய் 37 முதல் 47 ரூபாய் என விலைப் பட்டியல் நீள்கிறது.
வேதனையில் சின்ன வெங்காய விவசாயிகள்
பொதுவான காய்கறி விலை சரிவு ஒருபுறம் இருக்க, சின்ன வெங்காயத்தின் விலை தரைமட்டத்திற்குச் சரிந்துள்ளது விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் கிலோ 49 முதல் 62 ரூபாய் வரை விற்கப்பட்டாலும், சில உற்பத்திப் பகுதிகளில் கிலோ வெறும் 3 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சீசனில் 130 ரூபாய் வரை விற்ற சின்ன வெங்காயம், தற்போது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வெயில், மழை பாராமல் 3 மாதங்கள் உழைத்து விளைவித்த பயிருக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அவற்றைச் சந்தைக்குக் கொண்டு வராமல் விளைநிலங்களிலேயே 'பட்டறை' அமைத்துச் சேமித்து வருகின்றனர்.
இந்த பட்டறைகளில் சேமிக்கப்படும் வெங்காயம் 3 மாதங்கள் மட்டுமே தாங்கும். அதற்குள் விலை உயராவிட்டால், வெங்காயங்கள் அழுகி ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, அரசு தலையிட்டு சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications