ஒரே நாளில் வந்த சிக்கல்.. கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முதல்வர் விஜய்க்கு அவசரமாக கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : கோயம்பேடு சென்னை ஒப்பந்த ஊர்தி பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் நுழைவு கட்டண உயர்வை நிறுத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. பஸ்களுக்கான நுழைவுக் கட்டணம் உயருவது என்பது பஸ் உரிமையாளர்களை மட்டுமல்ல.. பயணிகளையும் பாதிக்கும். பண்டிகைக் காலங்கள் அல்லது வார இறுதி நாட்களில் கட்டண உயர்வு பயணிகள் தலையில் தான் விழும்.

வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் தேவையை பயன்படுத்திக் கொண்டு, ஆம்னி பேருந்துகள், வழக்கமாக வாங்கும் கட்டணத்தை விட, இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது மட்டும் தான் மக்களுக்கு தெரிகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகள் நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.. வாரத்தில் வெள்ளி சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வசூல் மிக குறைவாவே இருக்கும். சுங்க கட்டணம், சாலை வரி, பராமரப்பு செலவு எல்லாம் பார்த்தால் லாபம் குறைவாகவே இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகிறார்கள்

Koyambedu omni bus owners send urgent letter to Chief Minister Vijay

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், "சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) கட்டுப்பாட்டில் உள்ள கோயம்பேடு சென்னை ஒப்பந்த ஊர்தி பஸ் நிலையத்தில், ஆம்னி பஸ்களுக்கான நுழைவு கட்டணம் 24 மணி நேரத்துக்கு ரூ.150 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் வருகிற 15-ந் தேதி முதல் அதே 24 மணி நேரத்துக்கு ரூ.500 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 233.33 சதவீதம் உயர்வாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்பின் அமலாக்கத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். கட்டண உயர்வு குறித்த மறுபரிசீலனை முடியும் வரை, ஆம்னி பஸ்களுக்கு 24 மணி நேரத்துக்கு ரூ.150 என்ற முந்தைய நுழைவுக் கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இப்படி கடிதம் எழுதுவதற்கு முக்கிய காரணம், ஒரு நாளைக்கு 150 என்று இருந்த கட்டணத்தை ஒரேடியாக 500 ஆக உயர்த்தினால் அன்றாட செலவுக்கே திண்டாடிவிடுவார்கள். நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் . பஸ்களுக்கான நுழைவுக் கட்டணம் உயருவது என்பது பஸ் உரிமையாளர்களை மட்டுமல்ல.. பயணிகளையும் பாதிக்கும். பண்டிகைக் காலங்கள் அல்லது வார இறுதி நாட்களில் கட்டண உயர்வு பயணிகள் தலையில் தான் விழும்.

அதேபோல் சென்னையில் கோயம்பேட்டிலிருந்து பெரும்பாலான ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் கோயம்பேட்டைப் பயன்படுத்தும் ஆம்னி பஸ்களுக்கு 223 சதவீதம் கட்டணத்தை அதிகரித்திருப்பது பெரும் சிக்கலாகும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். காப்பீடு, சம்பளம், வாடகை, பராமரிப்பு & தேய்மானம், வரி, காப்பீடு & வட்டி, பேருந்து நிலைய நுழைவு & பார்க்கிங், ஆபிஸ் செலவுகள் என ஒரு நாளைக்கு ரூ. 2 6700 ரூபாய வரை செலவாகிறது. அந்த வகையில் பார்த்தால் 36 இருக்கைகள் கொண்ட ஒரு சொகுசுப் பேருந்தில், ஒரு நபருக்கு சராசரியாக ரூ. 800 - 900 கட்டணம் வசூலித்தால், 80% ஆக்கிரமிப்பில் ஒரு நாளின் வருமானம் ரூ. 30,000 முதல் 32,000 வரை இருக்கும். நாளொன்றுக்கு மொத்தச் செலவு ரூ. 26,700 ஆக இருக்கும்போது, பஸ் முழுமையாக இயங்கினால் மட்டுமே உரிமையாளருக்கு ரூ. 3,500 முதல் 5,000 வரை லாபம் கிடைக்கும்.

எனவே நுழைவுக் கட்டணம் ரூ. 150-லிருந்து ரூ. 500 ஆக உயரும் போது, பஸ் உரிமையாளரின் தினசரி லாபத்தில் சுமார் 10% நேரடிப் இழப்பு ஏற்படும். வார இறுதி நாட்கள் தவிர சாதாரண நாட்களில் 50-60% பயணிகள் மட்டுமே பயணிக்கும் சூழ்நிலையில், இந்த ரூ. 350 கூடுதல் உயர்வு பஸ் உரிமையாளர்களை நஷ்டத்திற்குத் தள்ளும் என்பதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+